பானிபூரி பிரியரா நீங்கள்? உடல்பருமனும், சர்க்கரை வியாதியும் வரவேற்கத் தயார் !

 

பானிபூரி பிரியரா நீங்கள்? உடல்பருமனும், சர்க்கரை வியாதியும் வரவேற்கத் தயார் !

பானி பூரி அதிக அளவில் உட்கொள்ளுவதல் உடல் பருமன் அதிகரிக்கவும், சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
வட இந்தியாவை தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் பானிபூரி அதிகமாக விற்கப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் வடஇந்திய தொழிலாளிகள் அதிகளவில் தமிழகத்தில் குடிபெயர்ந்ததுதான்.

pani poori

சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் ஒரு உரிமையாளரின் கீழ் பல்வேறு சிறுவர்கள் பணிபுரிகின்றனர். அவர்களது வேலை தள்ளுவண்டி கடையை வீதி வீதியாக எடுத்து சென்று பானிபூரி விற்பததுதான். அவர்களுக்கு மாதச் சம்பளம், தங்கும் இடம், உணவு வழங்கப்படுகிறது. மற்றபடி பானி பூரி விற்பனைக்கு தனியாக கமிஷன் ஏதும். கிடையாது. நாளடைவில் தொழில் கற்றுக்கொள்ளும் சிறுவர்கள் பின்னர் தனியாக ஒரு இடத்தை பார்த்து கடை போட்டுவிடுகிறார்கள்.
ஆனால் அவர்கள் தயாரித்து தரும் பானிபூரி சுகாதாரமானதா என்று கேட்டதால் சந்தேகம்தான். 
பானி பூரியை எவ்வித கையுறையும் போடாமல் அதை உடைத்து அதில் உருளை கிழங்கை வைத்து உப்பு நீரில் முக்கி நிறைய இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த கை எந்தளவு சுத்தமாக இருக்கிறது என்பது நமக்கு தெரியாது

pani poori

.

எனவே இப்படி சுகாதாராமின்றி வழங்கப்படும் உணவால் உடல் பருமன் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என மருத்துவர்கள் கூறிகிறார்கள். மேலும் சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் ஏதெனும் நோய் இருப்பவரின் கைகளில் பாக்டீரியா தொற்று ஏதேனும் இருந்தால் அந்நோய் நமக்கும் ஏற்பட கூடும். மேலும் பானி பூரி அதிகம் சாப்பிடுவதால் டைபாய்டு வர வாய்ப்பு அதிகம் உள்ளது

typhoid

.

பொதுவாக அதிக அளவு சோடியம் நிறைந்த உணவுகளை உண்ணாமல் இருப்பது நல்லது. சர்க்கரை நோயாளி மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் முக்கியமாக கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.