பாத்ரூம் சுத்தம் செய்த ‘சல்மான் கான்’…குற்ற உணர்ச்சியில் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் !

 

பாத்ரூம் சுத்தம் செய்த ‘சல்மான் கான்’…குற்ற உணர்ச்சியில் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் !

சண்டை அதிகம் ஆகி ஹவுஸ்மேட்ஸ் யாரும் விதிமுறைகளை ஒழுங்காக கடைப்பிடிக்காமலும், வீட்டைச் சுத்தப்படுத்தாமலும் இருந்து வந்துள்ளனர். 

ஹிந்தியில் பிக்பாஸ் சீசன் 13 நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியைப் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். அந்த நிகழ்ச்சியில் உள்ள ஹவுஸ்மேட்ஸ் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. சண்டை அதிகம் ஆகி ஹவுஸ்மேட்ஸ் யாரும் விதிமுறைகளை ஒழுங்காக கடைப்பிடிக்காமலும், வீட்டைச் சுத்தப்படுத்தாமலும் இருந்து வந்துள்ளனர். 

ttn

இதனால் ஆத்திரமடைந்த சல்மான் கான் அவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று, ஹவுஸ்மேட்ஸ் அனைவரையும் படுக்கையறையில் பூட்டி வைத்து விட்டு, வீட்டுக்குள் நுழைகிறார். அவருடன், 3 பேர் உதவுவதற்காக உள்ளே வருகின்றனர்.

ttn

உள்ளே நுழைந்த சல்மான் கான், சுத்தம் செய்யப்படாமல் இருக்கும் பாத்திரத்தைத் தானே சுத்தம் செய்கிறார். அவருடன் இருந்த உதவியாளர்களை எந்த வேலையையும் செய்ய விடாமல், தானே கழிவறையும் சுத்தம் செய்கிறார். 

ttn

அவ்வளவு பெரிய ஸ்டார் எதையும் பொருட்படுத்தாமல் அவரே கழிவறையைச் செய்வதைக் கண்ட ஹவுஸ்மேட்ஸ், குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். அதற்கு, சல்மானோ தாமதமாக மன்னிப்பு தெரிவிக்கிறீர்கள் என்று முகத்தில் அறைந்தார் போல கூறுகிறார். 

ttn