பாத்திமா தற்கொலை வழக்கு : 3 ஐஐடி பேராசிரியர்களுக்குச் சம்மன் !

 

பாத்திமா தற்கொலை வழக்கு : 3 ஐஐடி பேராசிரியர்களுக்குச் சம்மன் !

கடந்த 8 ஆம் தேதி ஐஐடி மாணவி பாத்திமா, அவர் தங்கியிருந்த பெண்கள் விடுதியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த 8 ஆம் தேதி ஐஐடி மாணவி பாத்திமா, அவர் தங்கியிருந்த பெண்கள் விடுதியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, நேரில் ஆய்வு மேற்கொண்ட சென்னை காவல் துறை ஆணையர், இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அதன் படி, மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் நேரில் சென்று ஐஐடி பேராசிரியர்கள், பாத்திமா நண்பர்கள், விடுதியில் தங்கியிருந்த நபர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் 2 நாட்களாக விசாரணை மேற்கொண்டனர்.

Fathima

 

அதனையடுத்து, பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப்பிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்,  பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் குறித்து பல முறை பாத்திமா அவரது வீட்டில் கூறியிருப்பதாக அப்துல் தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி மாணவி தற்கொலை செய்து கொண்டதன் பிறகு அவரது செல்போனில் பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், ஹேமச்சந்திரன் காரா மற்றும் மிலிந்த் பிராமே ஆகியோர் தான் காரணம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

Fathima

இதன் அடிப்படையில் அந்த 3 பேராசிரியர்களையும் விசாரணைக்கு நேரில் ஆஜராகும் படி ஐஐடி பதிவாளர் மூலம் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். பாத்திமா தற்கொலை வழக்கில் சம்மந்தப்பட்டுள்ள பேராசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதுகலை மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.