பாதுகாவலர்களை மாற்றிய விவகாரம்…. மத்திய பிரதேச காங்கிரஸ் அரசால் எங்க உயிருக்கு ஆபத்து…. பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் குற்றச்சாட்டு….

 

பாதுகாவலர்களை மாற்றிய விவகாரம்…. மத்திய பிரதேச காங்கிரஸ் அரசால் எங்க உயிருக்கு ஆபத்து…. பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் குற்றச்சாட்டு….

மத்திய பிரதேச காங்கிரஸ் அரசின்கீழ் எங்க உயிருக்கு ஆபத்து இருப்பதாக பா.ஜ.க.வை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.கக்ள் குற்றச்சாட்டியுள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக கமல் நாத் அரசை கவிழக்க காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. இழுத்து வருவதாக பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் மத்திய பிரதேச காங்கிரஸ் அரசின்கீழ் எங்க உயிருக்கு ஆபத்து உள்ளதாக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

காங்கிரஸ்

மத்திய பிரதேச காங்கிரஸ் தலைமையிலான அரசு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் விஸ்வாஸ் சரங் மற்றும் சஞ்சய் பதக் ஆகியோரின் பாதுகாவலர்களை மாற்றியது. ஆனால் புதிய பாதுகாவலர்கள்கீழ் நாங்கள் பாதுகாப்பாக உணரமுடியவில்லை என பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவரும் கூறினர். இது தொடர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. விஸ்வாஸ் சரங் கூறுகையில், மாநில அரசை சீர்குலைத்து, அதன் எம்.எல்.ஏ.க்களை இழுப்பதாக எங்கள் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டியது. இப்போது எங்களது பாதுகாவலர்களை மாற்றியுள்ளது. காங்கிரஸ் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய பாதுகாவலர்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், தற்போது எந்தவொரு பாதுகாவலரும் இல்லாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

முதல்வர் கமல்நாத்

மற்றொரு பா.ஜ.க. எம்.எல்.ஏ. சஞ்சய் பதக் வெளியிட்டுள்ள வீடியோவில், அரசியல் ஆதாயத்துக்காக நான் கொல்லப்படலாம் என தெரிவித்துள்ளார். பாதுகாவலர் மாற்றம் விவகாரம் தொடர்பாக அம்மாநில உள்துறை அமைச்சர் பாலா பச்சன் கூறுகையில், பாதுகாவலர்களை மாற்றுவது வழக்கமான நடைமுறை. பொதுமக்களின் பிரதிநிதிகளின் பாதுகாப்பும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்பதால் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு போதிய பாதுகாப்பு கிடைக்கும் என நாங்கள் உறுதியளிக்க விரும்புகிறோம். அவர்களுக்கு எது நடந்தாலும் மாநில அரசு பதில் அளிக்கும் என தெரிவித்தார்