பாதுகாப்பு அச்சுறுத்தல் எதிரொலி…. ஜம்மு அண்டு காஷ்மீரில் பஞ்சாயத்து இடைத்தேர்தல் ஒத்திவைப்பு

 

பாதுகாப்பு அச்சுறுத்தல் எதிரொலி…. ஜம்மு அண்டு காஷ்மீரில் பஞ்சாயத்து இடைத்தேர்தல் ஒத்திவைப்பு

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பஞ்சாயத்து இடைத்தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக தலைமை தேர்தல் அலுவலக அதிகாரி ஷைலேந்திரா குமார் தெரிவித்தார்.

ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் காலியாக 11,639 பஞ்சாயத்து இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக ஜம்மு அண்டு காஷ்மீர் அரசு கடந்த வாரம் அறிவிக்கை வெளியிட்டது. ஜம்மு அண்டு காஷ்மீர் புதிய யூனியன் பிரதேசமாக உதயமாகிய பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் மிகவும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

தேர்தல் வாக்குப்பதிவு (கோப்பு படம்)

அங்கு பஞ்சாயத்து இடைத்தேர்தல் மார்ச் 5ம் தொடங்கும் தேர்தல் மொத்தம் 8 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மேலும் வாக்குப்பதிவு காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பஞ்சாயத்து  இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். 

தேர்தல் வாக்குப்பதிவு (கோப்பு படம்)

இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலக அதிகாரி ஷைலேந்திர குமார் கூறுகையில், ஜம்மு அண்டு காஷ்மீரில் அடுத்த மாதம் நடைபெறுவதாக இருந்த பஞ்சாயத்து இடைத்தேர்தல், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவித்தார். 2 அல்லது 3 வாரங்களுக்குள் தேர்தலுக்கான புதிய அட்டவணை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக ஜம்மு அண்டு காஷ்மீரில் 2018ல் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. இருப்பினும் அந்த தேர்தலை என்.சி. மற்றும் பி.டி.பி. கட்சிகள் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.