“பாதுகாப்புத்துறையின் நிதி ஒதுக்கீட்டையே சிறப்பான அரசின் செயல்பாடாக காண்பித்து கொள்வது வேதனையானது!” – கமல் ஹாசன்

 

“பாதுகாப்புத்துறையின் நிதி ஒதுக்கீட்டையே சிறப்பான அரசின் செயல்பாடாக காண்பித்து கொள்வது வேதனையானது!” – கமல் ஹாசன்

பாதுகாப்புத்துறையின் நிதி ஒதுக்கீட்டையே சிறப்பான அரசின் செயல்பாடாக காண்பித்து கொள்வது வேதனையானது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை: பாதுகாப்புத்துறையின் நிதி ஒதுக்கீட்டையே சிறப்பான அரசின் செயல்பாடாக காண்பித்து கொள்வது வேதனையானது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.

பாதுகாப்புத்துறையின் நிதி ஒதுக்கீட்டையே சிறப்பான அரசின் செயல்பாடாக காண்பித்து கொள்வது வேதனையானது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுகாதாரம் என்று சொல்லும் போது, கொரோனாவுக்கு பின் இந்தியாவை புனரமைக்கும் திட்டத்தில் முதலில் நாம் கவனம் செலுத்த வேண்டியது சுகாதாரத்துறையின் மேல் தான். ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பாதுகாப்புக்கான நிதி என்பது நாட்டின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் நிதியை விட அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

2020-21ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நமது நாடு பாதுகாப்புக்கு ஒதுக்கியிருப்பது ₹471,378 கோடிகள். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2%. ஆனால் நம் சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறைக்கான நிதி, 1 சதவிகிதத்தை சுற்றித்தான் கடந்த 10 ஆண்டுகளாக இருக்கிறது. அமெரிக்கா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறைக்கு 8% , பாதுக்காப்புக்கு 3.1% நிதி ஒதுக்குகிறது. அமெரிக்கா மட்டுமல்ல, வளர்ந்த நாடுகள் அனைத்துமே இந்த முறையில் தான் நிதியை ஒதுக்குகிறார்கள். ஆனால் எனது நாட்டில் இன்னும் பாதுகாப்புத்துறையின் நிதி ஒதுக்கீட்டையே, சிறப்பான அரசின் செயல்பாடாக காண்பித்து கொள்வது  வேதனையானது.

உண்மையான தேசப்பற்று என்பது முதலில் ஒட்டு மொத்த தேசத்தின் ஆரோக்கியத்தை காப்பதில் பெருமை கொள்வதே ஆகும். அதன்பின் தான் பொருளாதரமும், பாதுகாப்புத்துறையும் இருக்க வேண்டும். உடல் நலத்திலும், சுகாதாரத்திலும் அக்கறை இல்லாத நாடு, நமது இராணுவத்தின் வீரத்தையும், ஆற்றலையும் காட்டி போருக்கு தயார் என்று அறைகூவுவது கொலை குற்றத்துக்கு சமமாகும். தயார் நிலையில் இருக்கும் பாதுகாப்புத்துறை நாட்டிற்கு நல்லது என்றாலும், வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் அதை பொருட்படுத்தாது. அதனால் தான் இந்தியா பேரிடர், பெருநோய் காலத்திற்கென, அதிகப்படியான நிதியை தனியாக ஒதுக்கீடு செய்து முன்னேற்பாடுகளை செய்வது உடனடி தேவையாகிறது.

வல்லரசாகும் கனவையும், பெரும் மக்கள் தொகையும் கொண்ட நாடு தனது சுகாதாரத்தை காக்கும் பொறுப்பில் இவ்வளவு பலவீனமாக இருக்க கூடாது. எல்லைக்கு அப்பால் இருக்கும் ஆபத்தை விட, நாட்டின் உள் இருக்கும் ஆபத்துக்கள் பெரிது. சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறைக்கு அதற்கு தேவையான நிதியை ஒதுக்கி நாட்டை புனரமைப்பது,  என்பது நமது முக்கியமான பணியாகும்” என்று மேலும் பல கருத்துக்களை கூறியுள்ளார்.