பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம்! நம்ப வைத்து ஏமாற்றும் பழனிசாமி அரசு?- டிடிவி தினகரன்

 

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம்! நம்ப வைத்து ஏமாற்றும் பழனிசாமி அரசு?- டிடிவி தினகரன்

ஹைட்ரா கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களினால் வேளாண் நிலங்கள் நாசமாவதால் அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஹைட்ரா கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களினால் வேளாண் நிலங்கள் நாசமாவதால் அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களது கோரிக்கைக்குச் செவிசாய்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்றும் வேளாண் மண்டலங்களைப் பாதுகாக்கத் தனிச் சட்டம் கொண்டு வரப்படும் சமீபத்தில் தெரிவித்திருந்தார். 

ttn

 அதனைத்தொடர்ந்து நேற்று சட்டப்பேரவையில், காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாதுகாக்கப் பட்ட பகுதியாக அறிவிக்கப்படும் என்று அறிவித்தார். இது தொடர்பான சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் என்று இன்று காலை தெரிவிக்கப்பட்டது. அதன் படி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்ட மசோதாவைத் தாக்கல் செய்தார். இது விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

 

 

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் , “ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கொடுத்த அனுமதி தொடருமா ? என்ற தெளிவு புதிய சட்டத்தில் இல்லை: தமிழக மக்களையும், விவசாயிகளையும் நீட் தேர்வு போல மீண்டும் நம்ப வைத்து ஏமாற்றி இருக்கிறதோ பழனிசாமி அரசு?” என குறிப்பிட்டுள்ளார்.