பாதிப்பு 536ஆக உயர்வு……. விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா வைரஸ்….. முடக்கத்தை அசால்ட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள்……

 

பாதிப்பு 536ஆக உயர்வு……. விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா வைரஸ்….. முடக்கத்தை அசால்ட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள்……

நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 536ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்து ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இத்தாலி, ஈரான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. நம் நாட்டில் தொடக்கத்தில் தொற்று நோயான கொரோனா வைரஸ் குறிப்பிடும்படி அளவில் பரவவில்லை. ஆனால் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது.

மருத்துவ பரிசோதனை

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அறிக்கையின்படி, நேற்று இரவு நிலவரப்படி, நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 536ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கொரோனா வைரஸ் எந்த அளவுக்கு தீவிரமாக பரவி வருகிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

முடக்கம்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாம் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருந்தாலே போதும். நாம் வீட்டை விட்டு வெளியே சென்றால் கொரோனா வைரஸ் வீட்டுக்குள் வந்து விடும். நம் பகுதியில் யாரும் கொரோனா வைரஸால் யாரும் பாதிக்கப்படவில்லை அதனால் வெளியே சென்றாலும் நமக்கு ஒன்றும் ஆகாது என்ற நினைப்பை கைவிட்டு விடுங்கள். கொரோனா வைரஸ் கண்ணுக்கு தெரியாத எமன். ஆகையால் இன்று முதல் 21 நாட்களும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்.