பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 918ஆக உயர்வு… உயிர்பலி 19ஆக அதிகரிப்பு.. பீதியை கிளப்பும் கொரோனா வைரஸ்…..

 

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 918ஆக உயர்வு… உயிர்பலி 19ஆக அதிகரிப்பு.. பீதியை கிளப்பும் கொரோனா வைரஸ்…..

நம் நாட்டில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 918ஆக உயர்ந்துள்ளது. இந்த தொற்று நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது.

இத்தாலி, ஈரான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. நம் நாட்டில் தொடக்கத்தில் தொற்று நோயான கொரோனா வைரஸ் குறிப்பிடும்படி அளவில் பரவவில்லை. ஆனால் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது.

தனிமைப்படுத்தப்பட்ட நபர்

இதனையடுத்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியது. இருப்பினும், கொரோனா வைரஸ் அதனை காட்டிலும் தீவிரமாக பரவ தொடங்கியது. இதனையடுத்து கொரோனா வைரஸின் தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு கடந்த புதன்கிழமை முதல்  நாடு முழுவதும் 21 நாட்கள் முழுமையாக முடக்கத்தை அறிவித்தது.

கொரோனா வைரஸ்

ஆனாலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் இழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நேற்று இரவு 8 மணி  நிலவரப்படி, கொரோன வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 918ஆக உயர்ந்துள்ளது. இந்த தொற்று நோய்க்கு 19 பேர் பலியாகி உள்ளனர். அதேவேளையில் உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டி விட்டது.