பாண்டிச்சேரி என்றால் உங்களுக்கு ‘மற்றது’ அத்தனையும் ஞாபகத்துக்கு வருதுல்ல…இதப்பத்தி எதாவது தெரியுமா..!

 

பாண்டிச்சேரி என்றால் உங்களுக்கு ‘மற்றது’ அத்தனையும் ஞாபகத்துக்கு வருதுல்ல…இதப்பத்தி எதாவது தெரியுமா..!

பாண்டிச்சேரி என்றால் உங்களுக்கு நாக்கில் எச்சில் ஊரும்…விதவிதமான சரக்குகள் எல்லாம் வந்து போகும்! அதைத்தாண்டியும் சில அட்ராக்சன் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

பாண்டிச்சேரி என்றால் உங்களுக்கு நாக்கில் எச்சில் ஊரும்…விதவிதமான சரக்குகள் எல்லாம் வந்து போகும்! அதைத்தாண்டியும் சில அட்ராக்சன் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.ஆனால்,எப்போதாவது பாண்டிச்சேரி எல்லைக்குள் நுழையும் போது,கிரேக்க கட்டிடக்கலைப் பாணியில் அமைக்கபட்ட ஒரு அழகிய வெண்மை நிற நினைவிடம் இருப்பதை கவனிசிருக்கீங்களா?! 

alcohol

பாண்டிச்சேரிக்குள் இருக்கும் பாரதி பூங்காவில் அந்த நினைவிடத்தின் உண்மையான வடிவத்தைப் பார்க்கலாம்.அந்த நினைவிடத்துக்கு பெயர் ஆயி மண்டபம்.ஆயி என்பவள் கிருஷ்ணதேவராயர் காலத்தில் வாழ்ந்த பணக்கார தாசி! அவளின் ஞாபகார்த்தமாகத்தான் இன்றைக்கும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது இந்த நினைவிடம்.

என்னது தாசிக்கு நினைவிடமா என்று ஆச்சர்யமும்,குழப்பமும் வருதா?இந்த வரலாற்று நிகழ்வுக்கு பின்னால்,ஒரு தாசி பெண்ணின் மிகப் பெரிய தியாகமும், மன்னனின் முட்டாள்தனமும் அடங்கியிருப்பதைத் தெரிந்து கொள்ள,ஒரு சின்ன ஃபிளாஷ் பேக் போகலாம்.

krishnathevarayar

கிருஷ்ண தேவராயர் தென்னிந்திய நிலப்பரப்பில் பெரும்  பகுதியை ஆண்டு கொண்டிருந்த காலம் அது. தன்,ராஜ்ஜியத்தைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்ட மன்னர்,வேலூரைப் பார்த்துவிட்டுப்,புதுவை உழவர்கரையில் உள்ள தனது ஆதரவாளர்,உய்யக்கொண்ட விசுவராயரைப் பார்க்க புறப்பட்டார்.

வழியில் முத்தரையர் பாளையம் என்கிற ஊரின் அருகில் வரும்போது விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த  ஒரு பெரிய கட்டிடத்தைப் பார்த்ததும் கோவில் என்று நினைத்து கும்பிட்டார்.இதைப்பார்த்த உள்ளூ ஆள் ஒருத்தர், அரசரிடம்,நீங்கள் வணங்கியது ஆலயமல்ல,அது ஆயி என்கிற தாசியின் இல்லம்,என்று சொல்ல அரசருக்கு கோபம்,அவமானம்…உடனே அந்தக் கட்டிட்டத்தை இடிக்க உத்தரவு பிறப்பித்தார்.

pondicherry

இது கேட்டு,ஓடிவந்த ஆயி எத்தனை கெஞ்சிக்கேட்டும் கிருஷ்ண தேவராயர் மனம் இரங்கவில்லை.கடைசியில் தான் கட்டிய மாளிகையை தானே இடிப்பதாக ஆயி கேட்டுக்கொள்கிறாள்.இதற்கு மட்டும் அரசனின் ஒப்புதல் கிடைக்கிறது. தான் கட்டிய மாளிகையை தானே இடித்த ஆயி,அந்த இடத்தில் பொதுமக்களின் குடிநீர்த் தேவைக்காக ஒரு ஏரியை உருவாக்கினாள்.

புதுவையில் 18ம் நூற்றாண்டில் பிரஞ்சுக் காலணி ஏற்பட்டபோது,அவர்களின் வசிப்பிடங்கள் கடற்கரை அருகில் அமைந்ததால் குடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. புதுச்சேர் கவர்னர் ஃபிரான்சின் அன்றைய அரசன்,மூன்றாம் லூயியிடம் முறையிட, அவர் லா மைரஸ்ஸே என்கிற பொறியாளரை அனுப்பி வைத்தார். 

pondi

புதுவை வந்த லா மைரஸ்ஸே,சுற்றுப்புற பகுதிகளை ஆய்வு செய்து,ஆயி வெட்டி வைத்த ஏரிதான் பிரட்சினைக்கு ஒரே தீர்வு என்று முடிவு செய்து,அந்த ஏரியிலிருந்து இன்றைய பாரதி பூங்கா வரை ஒரு கால்வாய் வெட்டி புதுவைக்கு நீர் கொண்டு வந்தான்.ஆட்சியாளர்களும் மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ayi

பிரஞ்சு அரசருக்கு கவர்னர் எழுதிய நன்றிக்கடிதத்தில் ஆயி செய்த தியாகம் குறித்து விவரமாக எழுதினார்.இதையறிந்து வியந்த ஃபிரஞ்ச் அரசன் மூன்றாம் லூயி நகரின் மத்தியில்,ஆயி நினைவிடம் அமைக்க உத்தரவிட்டார்.அப்படி அமைக்கப்பட்ட ஆயிமண்டபத்தைச் சுற்றி பிற்காலத்தில் பாரதி பூங்கா அமைந்தது.அந்த மண்டபத்தின் மாதிரியை பிற்கால புதுவை அரசு தனது எல்லைகள் தோறும் அமைத்தது.இதனால்,ஒரு முட்டாள் அரசனின் அறியாமையால் தண்டிக்கப்பட்ட ஆயியின் நினைவு நூற்றாண்டுகள் கடந்தும் புதுவை மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றுவிட்டது.

இதையும் படிங்க: மீன் பிரியர்கள் நாளைக்கே நல்லா சாப்பிட்டுக்கோங்கோ…இதுக்கு அப்புறம் அவ்வளவு தான்!