பாண்டிச்சேரி அன்னையின் மகா சமாதி தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது

 

பாண்டிச்சேரி அன்னையின் மகா சமாதி தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது

பாண்டிச்சேரி அன்னையின் சமாதி தினம் இன்று பாண்டிச்சேரியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் இன்று ஏராளமான அன்னையின் பக்தர்களால் மிகவும் விமர்சையாக அனுசரிக்கபடுகிறது.

 ஸ்ரீஅரவிந்த ஆசிரமம் தன்னைத் தேடி வருகின்ற பக்தர்களுக்கு நிம்மதியையும் பரிபூரண அருளையும் கொடுக்க வல்லது.

இத்தகைய இடத்தில்தான் கண்களைக் கவரும் இதமான இயற்கைச் சூழலில் பல விதமான வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் செடிகளின் நடுவே இன்றைக்கு அன்னை அமர்ந்திருக்கின்றார்.

annai

1878-ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 21- ஆம் நாள் வியாழக்கிழமை காலை 10.15 மணியளவில் அன்னை அவதரித்தார்.அன்னையின் பூர்வீக பெயர் பிளாஞ்சி ராக்சேல் மிர்ரா.

சிறு வயதில் இருந்தே ஆன்மீக ஆற்றல்கள் மிர்ராவுக்குள் பெருகி இருந்தது .இந்த ஆன்மீக ஆற்றலே பின்நாளில் பாண்டிசேரியில் எழுந்தருளி பகதர்களுக்கு அருள்பாலிக்க செய்ததது.

உங்களுக்கு உண்டான பிரச்னையை ஒரு நண்பரிடம்  தீர்வு வேண்டிச் செல்பவரிடம் சொல்வது போல் உருக்காமாக எடுத்துரையுங்கள். மூன்று நாட்கள் இடைவிடாமல்  பிரார்த்தனையை சொல்லுங்கள்.எப்போதெல்லாம் உங்கள் மனம் வாடுகிறதோ, அப்போதெல்லாம் அன்னையை நினையுங்கள். 

annai

ஒருவன் செய்த தவறுக்கான பிராயச்சித்தம் என்பது தவறை ஒப்புக் கொள்வது மட்டுமல்ல அதிலிருந்து முற்றிலும் மீண்டு வருவதற்கு அன்னையினை அனுதினமும் பிரார்த்திக்க வேண்டும்.

நம்பிக்கை மட்டும் உங்களிடம் இருந்தால் போதும் அன்னையிடம் உங்கள் பிரார்த்தனையை வைத்து பரிபூரண பலன் பெறலாம் என்பது அன்னையை வணங்குபவர்களின் அதீத நம்பிக்கையாகும்