பாட்ஷா டூ பேட்ட: 24 வருடங்களாக காத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்!

 

பாட்ஷா டூ பேட்ட: 24 வருடங்களாக காத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியுள்ள நிலையில், ரஜினி ரசிகர்களின் 24 வருட காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியுள்ள நிலையில், ரஜினி ரசிகர்களின் 24 வருட காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, முனீஸ்காந்த், சோமசுந்தரம், சசிக்குமார், சனந்த் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக ரஜினிகாந்த்-சிம்ரன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள ‘பேட்ட’ படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வருகிறது.

petta

தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகையை குறி வைத்துள்ள சன் பிக்சர்ஸ், தொடர் விடுமுறையை கணக்கிட்டு, வசூலை வாரிக் குவிக்கும் நோக்கில் ‘பேட்ட’ படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், கடந்த 24 வருடங்களாக ரஜினிகாந்த் நடித்த எந்த திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகாத நிலையில், ‘பேட்ட’ படம் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது. கடந்த 1995ம் ஆண்டு ஜன.12ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவின் பிளாக் பஸ்டர் கேங்க்ஸ்டர் படமான ‘பாட்ஷா’ திரைப்படம் ரிலீசானது.

baasha

ரஜினியின் ஸ்டைல் மட்டுமின்றி ரகுவரனின் வில்லத்தனமும் கலந்து புதுமையான கேங்க்ஸ்டர் கதையாக ‘பாட்ஷா’ திரைப்படம் பேசப்பட்டது. இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள இப்படம் வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 24 ஆண்டுகால காத்திருப்புக்கு பின் ரஜினி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக ‘பேட்ட’ பொங்கல் வரவுள்ளதை ரசிகர்கள் உற்சாகத்துடன் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கின்றனர்.