பாட்டு புத்தகம் வழங்கிய ‘கோமாளி’ குழு! நாங்க ரியல் 90’S கிட்…

 

பாட்டு புத்தகம் வழங்கிய ‘கோமாளி’ குழு! நாங்க ரியல் 90’S கிட்…

பாட்டு புத்தகம் வழங்கிய ‘கோமாளி’ குழு! நாங்க ரியல் 90’S கிட்…

தற்போது யூடியூப், எம்.பி.3 பிளேயர்களியில் கேட்டு ரசிக்கும் பாடல்கள் 1990 காலங்களில் பாட்டு புத்தகத்தின் மூலம் மெட்டுப்போடுவதுண்டு…. 1990 களில் வெளிவந்த சினிமா ரசிகர்களுக்கு பாட்டு புத்தகம் என்றால் கொள்ளை பிரியம். அந்த புத்தகத்தை வைத்துக்கொண்டு பாடலை மனப்பாடம் செய்து பாடி மகிழ்வர். தியேட்டர்களில் படம் வெளியாவதற்கு முன்பே சிறு கடைகளில் பாட்டு புத்தகம் விற்க தொடங்கிவிடும்.

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யூக்தா ஹெக்டே, கேஎஸ் ரவிகுமார், யோகிபாபு, உள்ளிட்ட பலர் நடித்துள்ள கோமாளி படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் உருவாகியுள்ள இப்படம் 1990 களில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது விழாவிற்கு வந்த அனைவருக்கும் பாட்டுப் புத்தகத்தை படக்குழுவினர் வழங்கியுள்ளனர்.

 

அதுமட்டுமின்றி ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படம் வெளியாகும் தினத்தில் படம் பார்க்க வரும் அனைவருக்கும் பாட்டுப் புத்தகத்தை இலவசமாக கொடுக்கவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். கோமாளி படக்குழுவினர்களின் இந்த முயற்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.