பாட்டுப் போட்டியில் வென்று தாயைக் காப்பாற்ற நினைத்த சிறுமிக்கு நேர்ந்த துயரம்…! கதறியழுத ரசிகர்கள்..

பாட்டுப் போட்டியில் வென்று தாயைக் காப்பாற்ற நினைத்த சிறுமிக்கு நேர்ந்த துயரம்…! கதறியழுத ரசிகர்கள்..

நூர்ஜனாவுக்கு 14 வயது,அவளது தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். தந்தைக்கும் பெரிய வருமானம் இல்லை, தாயின் மருத்துவச்செலவுக்கோ லட்சங்கள் வேண்டும். நூர்ஜனாவுக்கு ஒரே வழிதான் தெரிந்தது.

noorjana

உள்ளூர் தொலைக்காட்சி நடத்திய பாட்டுப்போட்டி! அதில் முதல் பரிசு 22 லட்சம். அதை வென்றே தீர்வது என்ற உறுதியோடு போட்டியில் கலந்துகொண்ட நூர்ஜனா இறுதிப்போட்டிக்கு வந்து விட்டாள்.அன்று மருத்துவமனைக்கு வந்து தன் தாயிடம் இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் வெற்றி எனக்குத்தான்.நான் பரிசுப் பணத்தோடு வந்து உனக்கு உயர் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வேன் என்று சொல்லி தாயின் கண்ணீரைத் துடைத்துவிட்டு விட்டு கிளம்பினாள்.

noorjana-01

அவள் சொன்னது போலவே, அவள் பாடத்தொடங்கியதும் ஜகார்த்தா நகர்மட்டுமல்ல இந்தோனேசிய தேசமே அமைதியாக அவள் பாடலைக் கேட்கத் தொடங்கியது.மருத்துவமனையில் படுத்திருந்த நூஜனாவின் தாயும் தரைதாரையாய் வழியும் கண்ணீரோடு மகள் பாடுவதைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டு இருந்தார்.

நூர்ஜனா பாடி முடித்ததும் அரங்கமே எழுந்து நின்று கைதட்டியது.அவள் வெற்றியை அறிவிக்க அறிவிப்பாளர் தயாரானபோது,மருத்துவமனையில் இருந்து ஃபோன் ஒரு வந்தது. நூர்ஜனாவின் தாய் மகள் பாடி முடித்த உடனே இறந்துவிட்டாள் என்ற செய்தியுடன்.வாயடைத்துப்போன அறிவிப்பாளர் தன்னை தேற்றிக்கொண்டு வந்து நூர்ஜனாவிடம் இதைச் சொன்னபோது அவளோடு சேர்ந்து அந்த அரங்கமே அழுதது… மாபெரும் மகிழ்ச்சி தருணத்தில் அந்த மரணச்செய்தி ஏன் வந்ததோ..!? பாவம் நூர்ஜனா நினைத்தபடி பாட்டுப்போட்டியில் வென்றும் தயையைக் காக்க முடியாமல் போன சோகம்… என்ன சொல்லித் தேற்ற முடியும் அந்தப் பதினான்கு வயதுக் குழந்தையை..?!