‘பாட்டில் கேப் சேலஞ்சை’ யாராவது இப்படிப் பண்ணி பாத்துருக்கீங்களா? மாஸ் காட்டிய துப்பாக்கி பட வில்லன்! 

 

 ‘பாட்டில் கேப் சேலஞ்சை’ யாராவது இப்படிப் பண்ணி பாத்துருக்கீங்களா? மாஸ் காட்டிய துப்பாக்கி பட வில்லன்! 

சென்னை: பாட்டில் கேப் சேலஞ்சில் இது வரை யாரும் செய்யாத அளவிற்கு மிகவும் மாஸ்ஸாக துப்பாக்கி பட வில்லன் செய்து காட்டியுள்ளார். 

இணையத்தில் அவ்வப்போது எதாவது ஒரு சேலஞ்ச் வைரலாகி வருவது வழக்கம். திலும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், கிக்கி சேலஞ், ஐஸ் பக்கெட் சேலஞ்ச், பிட்னஸ் சேனலில் சேலஞ்ச், நில்லு நில்லு சேலஞ் போன்றவற்றைப் பார்த்துள்ளோம். 

தற்போது ட்ரெண்டாகியுள்ளது பாட்டில் கேப் சேலஞ்ச். இந்த சவால் என்ன வென்றால், பாட்டிலின் மூடியை கால்களால் உதைத்து, அந்த மூடியை நீக்க வெண்டும். அதே நேரம், பாட்டிலும் கீழே விழக்கூடாது என்பது தான்.  இந்த சேலஞ்சில் ஹாலிவுட் நடிகர்களான ‘ஜேசன் ஸ்டாதம், லீவிஸ் டான், பாலிவுட் நடிகர் அக்சயகுமார் என்று பலரும் இதை வெற்றிகரமாகச் செய்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் துப்பாக்கி பட வில்லன் வித்யூ ஜமால் இந்த சேலஞ்சை வித்தியாசமாக மூன்று பாட்டில் வைத்துச் செய்து அசத்தியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.