பாட்டிகளை டார்கெட் செய்து கொள்ளையடிக்கும் ஆட்டோ ராணிகள் – உஷார் மக்களே!

 

பாட்டிகளை டார்கெட் செய்து கொள்ளையடிக்கும் ஆட்டோ ராணிகள் – உஷார் மக்களே!

பாட்டிகளுக்கு உதவுவது போல நடித்து அவர்கள் கழுத்தில் உள்ள தங்க நகைகளை திருடும் ஆட்டோ ராணிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னையில் பஸ்சுக்காக காத்திருக்கும் பாட்டிகளை குறிவைத்து உதவுவதாக கூறி ஆட்டோவில் ஏற்றிச்சென்று நகை பறிப்பதாக போலீசாருக்கு புகார் வந்துள்ளது. சென்னை செனாய் நகரைச் சேர்ந்த ரங்கநாயகி (70) சில தினங்களுக்கு முன்பு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன்னுடைய மகனை பார்க்க செல்வதற்காக பஸ்சுக்கு காத்துக்கொண்டிருந்தார்.

பாட்டிகளுக்கு உதவுவது போல நடித்து அவர்கள் கழுத்தில் உள்ள தங்க நகைகளை திருடும் ஆட்டோ ராணிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னையில் பஸ்சுக்காக காத்திருக்கும் பாட்டிகளை குறிவைத்து உதவுவதாக கூறி ஆட்டோவில் ஏற்றிச்சென்று நகை பறிப்பதாக போலீசாருக்கு புகார் வந்துள்ளது. சென்னை செனாய் நகரைச் சேர்ந்த ரங்கநாயகி (70) சில தினங்களுக்கு முன்பு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன்னுடைய மகனை பார்க்க செல்வதற்காக பஸ்சுக்கு காத்துக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு ஆட்டோவில் வந்த பெண்கள், எங்க பாட்டி போறீங்க என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் கீழ்ப்பாக்கம் என்று கூறியுள்ளார். நாங்க அந்த வழியாத்தான் போரோம் ஐந்து ரூபாய் கொடுங்க இறக்கிவிட்டுடுறோம் என்று கூறியுள்ளனர். ஷேர் ஆட்டோ போல என்று நினைத்த ரங்கநாயகியும் ஆட்டோவில் ஏறியுள்ளார்.

ranganayagi

சிறிது நேரத்தில், ஆட்டோவில் அமர்ந்திருந்த மற்றொரு பெண், “உங்க செயின் அறுந்து கிடக்குது பாருங்க” என்ற கூறியுள்ளார். “நல்லவேளைமா, நீ பார்த்து சொன்ன, இல்லைன்னா வழியிலேயே எங்கயாவது விழுந்திருக்கும்” என்று கூறி செயினை எடுத்து வைத்துள்ளார். பின்னர், காகிதம் ஒன்றைக் கொடுத்து இதில் நல்லா பத்திரமா சுருட்டி வையுங்க, பையில இருந்து விழுந்திடப் போகுது என்று கூறியுள்ளனர். இவ்வளவு நல்லவர்களாக இருக்கிறார்களே என்று ரங்கநாயகி நினைத்து அவர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.
அதற்குள்ளாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வரவே, ஐந்து ரூபாயை கொடுத்துவிட்டு இறங்கிவிட்டார் ரங்கநாயகி. பிறகு, பையைப் பார்த்தபோது, அது கத்தரிக்கப்பட்டு சுருட்டி வைக்கப்பட்ட நகை திருடுபோயிருந்தது தெரிந்தது. அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை ரங்கநாயகி உணர்ந்துள்ளார். அதைத் தொடர்ந்து போலீசில் புகார் செய்துள்ளார்.
இவரைப் போல பல மூதாட்டிகளிடமிருந்து நகையைத் திருடியுள்ளதாக சில புகார்கள் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார். “பஸ்சுக்காக காத்திருக்கும் மூதாட்டிகளை குறிவைத்து காய் நகர்த்துகிறார்கள். எங்கே போக வேண்டும் என்று கேட்டு, நாங்களும் அங்குதான் செல்கிறோம் வாருங்கள் இறக்கிவிடுகிறோம் என்று அன்பாக பேசி வண்டியில் ஏற்றிக்கொள்கின்றனர். பிறகு, ஒருவர் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க நகையை அறுத்துவிட, மற்றொருவர் பாட்டிக்கு உதவுவதுபோல பாசாங்கு காட்டி அதை பையில் சுருட்டி வைக்க செய்கின்றனர். பின்னர், மற்றொருவர் பர்ஸ், பையை அறுத்து அதில் இருந்து செயினை கொள்ளையடித்துவிடுகிறார்.

auto

ஆட்டோவிலேயே செயினை அறுத்து எடுத்துக்கொண்டால், பாட்டி சத்தம்போட்டு ஊரைக் கூட்டிவிடக்கூடாது என்பதற்காக அவருக்கு நல்லது செய்வதுபோல் ரொம்பவும் நடித்து இப்படி செய்கிறார்கள். சென்னையில் பல காவல் நிலையங்களுக்கு இப்படி கொள்ளையடிக்கப்பட்டதாகப் புகார்கள் வந்துள்ளன. அம்பத்தூர், அயனாவரம், திருவொற்றியூர் என ஒரு வாரத்தில் மூன்று புகார் வந்துள்ளது. இது தவிர பலரும் புகார் செய்யாமல் விட்டுவிடுகின்றனர். 
பாட்டிகளை ஏமாற்றி நகையைப் பறிக்கும் ஆட்டோ ராணிகளை தேடி வருகிறோம். யாராவது பாசமாக பேசி வண்டியில் ஏற்ற முயன்றால் ஏற வேண்டாம். சந்தேகத்துக்குரிய வகையில் யாராவது அணுகினால் அவர்களைப் பற்றி புகார் அளித்தால் அவர்களை கண்டுபிடிப்பது எளிதாக இருக்கும்” என்கின்றனர் காவலர்கள்.