பாடிப்பறந்த கிளி ஜென்சிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்…

 

பாடிப்பறந்த கிளி ஜென்சிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்…

சுமார் 4 வருடங்கள் மட்டுமே பாடிவிட்டுப் பறந்த கிளி ஜென்சி. ஆனால் இன்றும் அந்த வசியக்குரல் தமிழ் நெஞ்சங்களைத் தாலாட்டிக்கொண்டேயிருக்கிறது. இன்று அவருக்கு 57 வது பிறந்தநாள்.

சுமார் 4 வருடங்கள் மட்டுமே பாடிவிட்டுப் பறந்த கிளி ஜென்சி. ஆனால் இன்றும் அந்த வசியக்குரல் தமிழ் நெஞ்சங்களைத் தாலாட்டிக்கொண்டேயிருக்கிறது. இன்று அவருக்கு 57 வது பிறந்தநாள்.

ஜென்சியின் குடும்பம் இசைக்குடும்பம் என்பதால் அவருக்கு இசை மிக இளம் வயதிலேயே கைகூடியது.தமிழ்த் திரையுலகுக்கு ஒரு புதிய பெண் குரலை அறிமுகப் படுத்த வேண்டும் என்று எண்ணியிருந்த இசைஞானி இளையராஜா மலையாளத்தில் கிறித்தவப் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த இவரை தாம் இசையமைத்துக் கொண்டிருந்த “திரிபுரசுந்தரி” என்ற படத்தில் முதன் முறையாக இவருக்கு”வானத்துப் பூங்கிளி” என்ற பாடலைப் பாட வாய்ப்பு தந்தார். 

jency

அதைத் தொடர்ந்து “முள்ளும் மலரும்”, “பிரியா போன்ற பல வெற்றிப்படங்களில் பாடினார். 
1978 முதல் 1982 வரை பல வெற்றிப்படங்களில் பாடிக் கொண்டிருந்த இவர், திருமணத்துக்குப் பிறகு அரசு பணி கிடைத்ததால்திரைப்படங்களில் பாடுவதை
நிறுத்தி விட்டார். தற்போது கிறித்தவச் சமயப் பாடல்களை மட்டும் பாடுகிறார்.தமிழில்
இவர் பாடிய புகழ் பெற்ற பாடல்கள்

வானத்துப் பூங்கிளி 
(திரிபுரசுந்தரி)
அடி பெண்ணே
(முள்ளும் மலரும் ) 
ஆடச் சொன்னாரே 
(வட்டத்துக்குள் சதுரம)
அலங்கார பொன் ஊஞ்சலே
(சொன்னது நீதானா)
௭ன் உயிர் நீதானே 
(பிரியா)
தம்தன நம்தன
(புதிய வார்ப்புகள்) 
இதயம் போகுதே
(புதிய வார்ப்புகள்) 
ஆயிரம் மலர்களே
(நிறம் மாறாத பூக்கள் ) 
இரு பறவைகள்
(நிறம் மாறாத பூக்கள்) 
கீதா சங்கீதா
(அன்பே சங்கீதா) 
மயிலே மயிலே
(கடவுள் அமைத்த மேடை) 
தோட்டம் கொண்ட ராசாவே 
(பகலில் ஒரு இரவு) 
ஹேய் மஸ்தானா 
(அழகே உன்னை ஆராதிக்கிறேன் )
என் வானிலே
(ஜானி )
மீன்கொடி தேரில்
(கரும்பு வில் ) 
தெய்வீக ராகம் 
(உல்லாசப் பறவைகள் )
பூ மலர்ந்திட நடமிடும் 
(டிக்! டிக்! டிக்! )
காதல் ஓவியம் பாடும் காவியம்
(அலைகள் ஓய்வதில்லை )
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
(அலைகள் ஓய்வதில்லை )
பனியும் நானே மலரும் நீயே 
(பனிமலர்)
என் கானம் எங்கு அரங்கேறும்
(ஈர விழி காவியங்கள்)
கல்யாணம் என்னை முடிக்க 
(மெட்டி)
பூத்து நிக்குது காடு ,
என் கானம் எங்கு அரங்கேறும்
(எச்சில் இரவுகள் )
ஆத்தோரம் காத்தாட 
(எங்கேயோ கேட்ட குரல் )

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜென்சிம்மா.