பாடல் பெற்ற தலங்கள்- 6:- மயேந்திரப்பள்ளி

பாடல் பெற்ற தலங்கள்- 6:- மயேந்திரப்பள்ளி

சிதம்பரத்தில் இருந்து,சீர்காழி போகும் சாலையில் கொள்ளிடம் சென்று அங்கிருந்து ஆச்சாள்புரம் வழியாக நல்லூர்,முதலை மேடு கடந்தால் மயேந்திரப்பள்ளி. இப்போது கோவிலடிப் பாளையம் என்று அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு இந்திரன் வந்து வழிபட்டதால் இத்தலத்திற்கு மகேந்திர பள்ளி என்று பெயர் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. 

சீர்காழி: உடலில் எந்த நோயிருந்தாலும் அதிலிருந்து விடுதலை பெற,இந்த திருத்தலத்தில் வந்து நீராடுங்கள். 

சிதம்பரத்தில் இருந்து,சீர்காழி போகும் சாலையில் கொள்ளிடம் சென்று அங்கிருந்து ஆச்சாள்புரம் வழியாக நல்லூர்,முதலை மேடு கடந்தால் மயேந்திரப்பள்ளி. இப்போது கோவிலடிப் பாளையம் என்று அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு இந்திரன் வந்து வழிபட்டதால் இத்தலத்திற்கு மகேந்திர பள்ளி என்று பெயர் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. 

temple

கோவில்,கொள்ளிடம் ஆற்றின் கழிமுகத்தில் கடலுக்கு இரண்டு கி.மீ முன்னதாக ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது.66 செண்ட் பரப்பளவில் ஒற்றை பிரகாரம் கொண்ட கோவில்.மூலவர் சுயம்புலிங்கமான அருள்மிகு திருமேனி அழகர்.அம்மன் வடிவாம்பிகை மூன்றுநிலை ராஜகோபுரம் கொண்ட அழகிய புராதன ஆலயம் மயேந்திரப்பள்ளி.

temple

கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் ஆலயத்தின் எதிரே மகேந்திர தீர்த்தம். சூரியன், சந்திரன், பிரம்மன்,முதலியோர் வழிபட்டு அருள் பெற்ற தலம்.விலங்குகள், நீர்வாழ்வன, ஊர்வன,பறப்பன ஆகியவையும் இறைவனை வழிபட்டு முக்தி அடைந்ததாக தலபுராணம் சொல்கிறது. கோவிலின் முன்னால் இருக்கும் இந்திர தீர்த்தத்தில் ஒருமண்டலம் ( நாற்பது நாட்கள்) நீராடி வழிபட்டால் எந்த உடல் நோயிலிருந்தும் விடுதலை பெறலாம் என்பது இந்த கோவில் பக்தர்களின் நம்பிக்கை.திருமேனி அழகர்,வடிவாம்பிகை ஆகிய பெயர்களுக்கு ஏற்ப இறைவன் அம்பிகை திருவுருவச் சிலைகள் எழிலுடன் அமைந்திருக்கின்றன.திருநாவுக்கரசர் உற்சவர் சிலையும் பேரழகுடன் இருக்கிறது.

temple

தேவாரப் பதிகம் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது ஆறாவது. திருநாவுக்கரசர் திருப்பதிகம் பெற்றது.இத்தலத்தில் உள்ள முருகன் மீது அருணகிரி நாதர் திருப்புகழ் பாடியுள்ளார்.

இதையும் படிங்க: இந்துக்களாக பிறந்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக சென்று தரிசனம் செய்ய வேண்டிய கோவில் இது…