பாடகி சின்மயிடம் சிக்கிய கமல் ஹாசன்: அதிர்ச்சியில் திரையுலகம்!

 

பாடகி சின்மயிடம் சிக்கிய கமல் ஹாசன்:  அதிர்ச்சியில் திரையுலகம்!

 குருநாதரான மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தரின் திருவுருவ சிலையும் திறந்து வைத்தார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்   திரையுலகிற்கு வந்த 60  ஆண்டுகள் ஆனதையொட்டி சமீபத்தில் ரஜினியுடன் இணைந்து ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தையும்,  குருநாதரான மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தரின் திருவுருவ சிலையும் திறந்து வைத்தார்.  இந்த நிகழ்வில்  இயக்குநர் பாரதிராஜா, பாடலாசிரியர் வைரமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். 

vairamuthu

இந்நிலையில் பாடகி சின்மயி இதுகுறித்து தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில், ‘நான் சொல்வது  வைரமுத்துவை. ஒருவன் மீது பாலியல் புகார் விழுந்தால் அவனால் வெளியில் தலைகாட்ட முடியாது. யாரையும் எதிர்கொள்ள முடியாது. ஆனால்  இந்த ஆண்டு முழுக்க பல திமுக நிகழ்வுகள், ஐ.ஏ.எஸ் அதிகாரி பயிற்சி அகாடமி நிகழ்வுகள், தமிழ் மொழி நிகழ்வுகள், புத்தக வெளியீடுகள் என் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். அவருக்கு எதுவும் நடக்கவில்லை. ஆனால்  பாதிப்புக்குள்ளான நான் தடை செய்யப்பட்டேன். இது தான் திரையுலகில் உள்ள பெரியவர்களால் எனக்கு கொடுக்கப்பட்ட நீதி’ என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் தனது  டிவிட்டர் பக்கத்தில், பாலியல் புகாரில் சிக்கியுள்ள நபர்கள் எப்படி பொது மேடையில்  தங்கள் இமேஜை  நிலைநிறுத்த வேண்டும் என்பதை நன்கு தெரிந்திருக்க வேண்டும். இதில் சில அரசியல் வாதிகளும் அடங்குவர். இவர்களை நினைக்கும் போது  பயம் ஏற்படுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். 

 

முன்னதாக பாடகி சின்மயி வைரமுத்து மீது மீடூ மூலம் பாலியல் குற்றச்சாட்டை முன்வந்தார். இந்த விவகாரம் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் நாளடைவில்  இந்த விவகாரம் மறக்கடிக்கப்பட்ட  நிலையில் மீண்டும் சின்மயி-யின் இந்த பதிவு மூலம் ஆரம்பமாகியுள்ளது.