பாடகி சின்மயிக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல நடிகர்!

 

பாடகி சின்மயிக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல நடிகர்!

ராதாரவி – சின்மயி மோதலுக்கு இன்னும் கூடுதல் வழி வகுத்தது.இதனால் படவாய்ப்புகள்  இல்லாமல் இருந்தார் சின்மயி. 

மீடூ  மூலம்  பின்னணி பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது புகார் தெரிவித்ததிலிருந்து சின்மயியை பற்றி ராதாரவி விமர்சிப்பதும் அதற்கு சின்மயி பதிலடி கொடுப்பதும் வழக்கமானதாக இருந்து வருகிறது. இதையடுத்து சின்மயி டப்பிங் யூனியனிலிருந்து நீக்கப்பட்டது ராதாரவி – சின்மயி மோதலுக்கு இன்னும் கூடுதல் வழி வகுத்தது.இதனால் படவாய்ப்புகள்  இல்லாமல் இருந்தார் சின்மயி. 

 

இதையடுத்து டப்பிங் சங்கத்தின் தேர்தல் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு மீண்டும் ராதாரவி போட்டியிட அவரை எதிர்த்து  ராமராஜ்யம் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு சின்மயி போட்டியிடுகிறார். இதற்காக நேற்று முன்தினம் அவர்  சென்னை வடபழனியில் உள்ள டப்பிங் யூனியன் அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்தார். அப்போது பேசிய சின்மயி, என்னை காரணமே இல்லாமல் டப்பிங் சங்கத்திலிருந்து நீக்கிவிட்டார்கள். ஆனால்  என்னிடம் வாழ்நாள் உறுப்பினர் அட்டை  இருக்கிறது. அதனால் நான் தேர்தலில் போட்டியிடலாம்’ என்று கூறினார்.

ttn

இந்நிலையில் சின்மயிக்கு ஆதரவாக நடிகர் நாசர் தேர்தலில் களமிறங்கி உள்ளார்.  சின்மயி தலைவர் பதவிக்கு போட்டியிடும் அணியின்  செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதற்காக நேற்று  வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நடிகர் சங்கம் மட்டுமல்லாது ராதாரவிக்கு போட்டியாக  நாசர் டப்பிங் சங்கத்திலும் களமிறங்கியுள்ளார்.