பாடகரான பிக் பாஸ் பிரபலம் யாருனு தெரியுமா?

 

பாடகரான பிக் பாஸ் பிரபலம் யாருனு தெரியுமா?

பிக் பாஸ் முதல் சீசன் டைட்டில் வின்னர் ஆரவ் தற்போது “ராஜ பீமா” படத்தில் ஒரு பாட்டு பாடியுள்ளார்

சென்னை: பிக் பாஸ் முதல் சீசன் டைட்டில் வின்னர் ஆரவ் தற்போதுராஜ பீமாபடத்தில் ஒரு பாட்டு பாடியுள்ளார்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசன்  மூலம் அறிமுகம் ஆகி பிரபலம் ஆனவர் ஆரவ். இவர் தற்போது நரேஷ் சம்பத் இயக்கத்தில் எஸ்.மோகன் தயாரிக்கும்ராஜ பீமாதிரைப்படத்தில்  நடித்து வருகிறார்இப்படத்தில் ஆரவ்வுடன் ஓவியா ஒரு பாடலில் நடனம் ஆடுவது போன்ற புகைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

rajabheema

 

இந்நிலையில்  ‘ராஜ பீமாபடத்தில் ஆரவ் தனது சொந்தக்குரலில் ஒரு பாடல் பாடியுள்ளார். அதை உறுதி படுத்தும் விதமாக ஆரவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பாட்டு பாடுவது போன்ற புகைப்படம் பதிவிட்டுள்ளார். அது இப்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறதுஇப்படத்தின் இசை விரைவில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.