பாடகராக மாறிய மொட்டை ராஜேந்திரன்!

 

பாடகராக மாறிய மொட்டை ராஜேந்திரன்!

தமிழ் சினிமாவில் வில்லன், காமெடி நடிகராக அசத்திய மொட்டை ராஜேந்திரன் புதிய திரைப்படம் ஒன்றில் பாடகராக அறிமுகமாகவுள்ளார்.

சென்னை: தமிழ் சினிமாவில் வில்லன், காமெடி நடிகராக அசத்திய மொட்டை ராஜேந்திரன் புதிய திரைப்படம் ஒன்றில் பாடகராக அறிமுகமாகவுள்ளார்.

பாலா இயக்கிய ‘நான் கடவுள்’ படத்தில் வில்லனாக நடித்து தனி முத்திரை பதித்தவர் நடிகர் மொட்டை ராஜேந்திரன். அதைத் தொடர்ந்து ‘ராஜா ராணி’, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ’திருடன் போலீஸ்’, ‘டார்லிங்’, ‘தெறி’ போன்ற சில படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், புதிய திரைப்படம் ஒன்றில் பாடகராக அறிமுகமாகவிருக்கிறார். இசையமைப்பாளர் ஸ்ரீநாத் இசையமைப்பில் உருவாகும் படத்தில் ஒரு பாடலை மொட்டை ராஜேந்திரன் பாடுகிறார்.