பாஜக vs காங்கிரஸ் : மை நேம் இஸ் ராகா டீசர் – வீடியோ

 

பாஜக vs காங்கிரஸ் : மை நேம் இஸ் ராகா டீசர் – வீடியோ

ராகுல் காந்தியின் வாழ்க்கைத் திரைப்படமான ‘மை நேம் இஸ் ராகா’  டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மும்பை: ராகுல் காந்தியின் வாழ்க்கைத் திரைப்படமான ‘மை நேம் இஸ் ராகா’  டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மன்மோகன் சிங் பற்றிய The Accidental Prime Minister, பால் தாக்கரேவின் கதையான ‘Thackeray’ ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு உருவாகியுள்ள பொலிட்டிக்கல் பயோ பிக் ‘My name is RaGa’. ராகுல் காந்தியின் வாழ்க்கைக் கதையை தழுவி ரூபேஷ் பவுல் என்பவர் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் ராகுல் காந்தி தன் பாட்டி, தந்தை இழப்பை எப்படி கடந்து வந்தார். ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் முக்கிய அங்கமாய் இருக்கும் மனிதர்களை இழந்தபின், அந்தத் துயரத்தில் இருந்து எப்படி மீண்டு வருகிறான் என்பதே இதன் கதை என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

 

இதன் டீசரில் மோடி, அமித்ஷா போன்ற கதாபாத்திரங்களும், அரசியல் பிரச்சாரங்களும் காட்டப்படுகிறது. அதனால் இது பாஜக மற்றும் காங்கிரஸ் இடையேயான அரசியல் மோதல்களை பற்றி பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திரைப்படம் தேர்தலை ஒட்டி வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.