பாஜக-வுக்கு எதிராக வலுக்கும் மெகா கூட்டணி: மு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு

 

பாஜக-வுக்கு எதிராக வலுக்கும் மெகா கூட்டணி: மு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு

திமுக தலைவர் ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று சந்திக்கவுள்ளார்

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று சந்திக்கவுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. அந்த வகையில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பாஜகவுக்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை உருவாக்கும் நோக்கில் நாடு முழுவதும் இருக்கும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.

அதன்படி அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், கர்நாடக முதல்வர் குமாரசாமி, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோரை சந்தித்தார். மேலும், அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து வரும் 22-ம் தேதி கூட்டம் நடத்தவும் அவர் திட்டமிட்டு எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். அப்போது, எதிர்வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது, பாஜக-வை வீழ்த்துவதற்கான வியூகம் அமைப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவர்கள் ஆலோனை மேற்கொள்வார்கள் என தெரிகிறது.

முன்னதாக, சென்னை வரும் அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டத்திலும் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.