பாஜக-வில் இருந்து விலகிய பிரபல நடிகர் சத்ருகன் சின்ஹா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்!

 

பாஜக-வில் இருந்து விலகிய பிரபல நடிகர் சத்ருகன் சின்ஹா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்!

சத்ருகன் சின்ஹா, பாஜக-வுக்கு எதிராகவும், கட்சி தலைவர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்து வந்தார்

புதுதில்லி: பாஜக-வுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, அக்கட்சியில் இருந்து விலகிய பிரபல நடிகர் சத்ருகன் சின்ஹா காங்கிரஸ் கட்சியில் தன்னை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டார்.

பிகார் மாநிலம் பாட்னா சாகிப் தொகுதி எம்.பி.,-யும் பிரபல நடிகருமான சத்ருகன் சின்ஹா, பாஜக-வுக்கு எதிராகவும், கட்சி தலைவர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.

இதையடுத்து, பாஜக-வில் இருந்து கடந்த மாதம் விலகிய அவர், காங்கிரஸில் இணையப் போவதாக அறிவித்து இருந்தார். தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் ராகுலை சந்தித்தும் பேசினார்.

shatrughan sinha rahul

கட்சியில் சிலர் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். சர்வாதிகாரிகளாக நடந்து கொள்கிறார்கள். நான் கட்சியில் அவமதிக்கப்பட்டேன். மோடி, அமித்ஷா போன்றவர்களின் சர்வாதிகார செயல்பாடுகள் கட்சியில் மேலோங்கி இருக்கிறது. பாஜக அரசு அரசு ஏமாற்றுவதாகவும், பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பதாகவும் மக்கள் நினைக்கிறார்கள் எனவும் சத்ருகன் சின்ஹா சாடியிருந்தார்.

shatrughan sinha

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை அதிகாரப்பூர்வமாக சத்ருகன் சின்ஹா இணைத்துக் கொண்டார். பின்னர் பேசிய அவர், பாஜக ஒருவரும் கட்சி என விமர்சித்தார்.

எதிர்வரவுள்ள மக்களவை தேர்தலில் பிகார் மாநிலம் பாட்னா சாகிப் தொகுதியில் அவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவார் என தெரிகிறது. அந்த தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் களம் காண்கிறார்.

இதயும் வாசிங்க

ஆணாக வேடமிட்டு சிறுமிகளை காதல் வலையில் சிக்க வைத்த இளம்பெண்: ஷாக் ரிப்போர்ட்!