பாஜக – வில் இணைந்த அதிரடி கிரிக்கெட் வீரர் – டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்

 

பாஜக – வில் இணைந்த அதிரடி கிரிக்கெட் வீரர் – டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்

நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ தலைமையில் பாஜக- வில் இணைந்தார் பிரபல கிரிக்கெட் வீரர் கெளதம் காம்பீர்.

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் கெளதம் காம்பீர் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஐபிஎல் சர்ச்சை

இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக நீண்ட காலம் விளையாடினார். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கும் வீரேந்திர சேவாக் மற்றும் கெளதம் காம்பீர் ஜோடிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். 

gambhir in bjp

இந்நிலையில் கடந்த ஆண்டு டெல்லி மற்றும் ஐதராபாத் இடையே நடந்த ராஞ்சி தொடர் போட்டியோடு அனைத்து தரப்பு கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்றார் கெளதம் காம்பீர். முன்னதாக சென்ற வருடம் நடந்த ஐ.பி.எல் போட்டித் தொடரில் டெல்லி அணி கேப்டனாக இருந்த கெளதம் காம்பீர் தொடர் தோல்வி காரணாமக கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

gambhir in bjp

டெல்லி வேட்பாளர் 

இந்த வருடம் ஐபிஎல் தொடர் நாளை தொடங்க இருக்கும் நிலையில் காம்பீர் அரசியல் களத்தில் இறங்கியிருக்கிறார். டெல்லியில் நடைபெற்ற அரசியல் இணைவு விழாவில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் நெடுஞ்சாலை, போக்குவரத்து மற்று கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்காரி முன்னிலையில் கவுதம் பாஜகவில் இணைந்தார். 

gambhir in bjp

கவுதம் காம்பீருக்கு பாஜக துண்டை தோளில் போட்டு இரு அமைச்சர்களும் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து அவருக்கு புது டெல்லி நாடாளுமன்றத் தொகுதியை பாஜக ஒதுக்கவுள்ளதாகவும், அங்கு கவுதம் வேட்பாளராக போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.