பாஜக-வின் வருமானம், செலவு எவ்வளவு தெரியுமா?

 

பாஜக-வின் வருமானம், செலவு எவ்வளவு தெரியுமா?

2017-2018 நிதியாண்டில் அரசியல் கட்சிகளின் வருவாய் மற்றும் செலவு குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது

டெல்லி: 2017-2018 நிதியாண்டில் அரசியல் கட்சிகளின் வருவாய் மற்றும் செலவு குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் வருமானம், கட்சி வாரியாக அதற்கு கிடைக்கும் வருவாய், செலவு உள்ளிட்ட விவரங்களை ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம் எனும் அமைப்பு வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், 2017-2018 நிதியாண்டில் அரசியல் கட்சிகளின் வருமானம் குறித்த அறிக்கையை ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ளது. அதில், பாஜகவின் வருமானம் ரூ.1,027 கோடி எனவும், ரூ.750 கோடிக்கும் மேல் அதில் அக்கட்சி செலவிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.104 கோடியே 84 லட்சம் வருவாய் வந்ததாகவும், அதில், ரூ.83கோடியே 48 லட்சத்தை அக்கட்சி செலவிட்டுள்ளதாகவும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு ரூ.51கோடியே 69 லட்சம் வருமானம் வந்ததாகவும், அதில், ரூ.14 கோடியே 78 லட்சத்தை அக்கட்சி செலவிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேசமயம், காங்கிரஸ் கட்சி தனது வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையத்திடம் இதுவரை தாக்கல் செய்யவில்லை எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.