பாஜக-வின் தேர்தல் வியூகங்கள் – பெங்களூரு தொகுதியில் களமிறங்கும் இளம் நடிகை

 

பாஜக-வின் தேர்தல் வியூகங்கள் – பெங்களூரு தொகுதியில் களமிறங்கும் இளம் நடிகை

பாஜக சார்பில் பெங்களூரு ரூரல் தொகுதியில் நடிகை நிஷா யோகேஸ்வர் போட்டியிட இருக்கிறார்.

பாஜக சார்பில் பெங்களூரு ரூரல் தொகுதியில் நடிகை நிஷா யோகேஸ்வர் போட்டியிட இருக்கிறார்.

தேர்தல் வியூகங்கள்

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற ஒவ்வொரு கட்சியினரும் சில யுத்திகளைக் கையாண்டு வருகின்றனர். போட்டியாளர்கள், தேர்தல் அறிக்கைகள் என அந்தந்த பகுதி மக்களின் மனநிலைக்கேற்ப தேர்தல் வியூகங்கள் தொகுதிக்கு தொகுதி மாறுபடுகின்றன. 

நிஷா

இந்நிலையில், இந்த முறையும் வெற்றி பெற வேண்டுமென்பதில் பெரும் பிரயத்தனம் எடுத்து வரும் பாஜக வின் பிரதான வியூகமே மக்கள் மத்தியில் பிரபலமானவர்களை தேர்தல் களத்தில் நிறுத்துவது, பிரச்சாரங்களுக்கு அழைத்து வருவது ஆகியவையே ஆகும்.  சமீபத்தில் கூட கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் பாஜகவில் இனைந்து டெல்லி தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

நிஷா யோகேஷ்வர்

இந்த வரிசையில் தற்போது ரூரல் பெங்களூரு தொகுதியின் போட்டியாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் நடிகையும் மாடலுமான நிஷா யோகேஷ்வர். இவர் நடிகை மட்டுமல்ல முன்னாள் மத்திய அமைச்சர் சி.பி யோகேஸ்வராவின் மகள் ஆவர். 

நிஷா

இந்த முறையும் ரூரல்  பெங்களூரு தொகுதியில் போட்டியிட சி.பி யோகேஸ்வராவை பாஜக அணுகிய போது, அவர் தேசிய அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாகவும் அதே நேரம் தன் மகளுக்கு போட்டியிட வாய்ப்பளித்தால் பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் பணி செய்கிறேன் என்றும் அவர் கோரிக்கை வைத்ததாகத் தெரிகிறது.

ரூரல் பெங்களூரு தொகுதிக்கு ஒரு வலிமையான வேட்பாளரை எதிர்பார்த்துக் கொண்டிருந்த பாஜக, 29 வயதான நிஷா யோகேஸ்வரை தற்போது வேட்பாளராக முன்னிறுத்தலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் சென்று பேஷன் துறையில் மேற்படிப்பு படித்துள்ள நிஷா ஏற்கனவே நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களிலும் போட்டியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க 

பாஜக – வில் இணைந்த அதிரடி கிரிக்கெட் வீரர் – டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்