பாஜக-வினரால் என் உயிருக்கு ஆபத்து: காவல்துறை பாதுகாப்பு வேண்டும் ஊர்மிளா

பாஜக-வினரால் என் உயிருக்கு ஆபத்து: காவல்துறை பாதுகாப்பு வேண்டும் ஊர்மிளா

சமூக வலைதளங்களில் இயங்கும் ஊர்மிளா, பாஜகவினர் சமூக வலைதளங்களில் என் மீது வன்மத்துடன் பதிவிட்டு வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தால் எனக்கும் என்னை சார்ந்த பெண்களுக்கும் ஆபத்து அதிகரிக்கலாம் என்ற காரணத்தால் அமைதியாக இருந்தேன் என்றார்.

மும்பை: பாஜக ஆதரவாளர்களால் தனது உயிருக்கு ஆபத்து என காவல்துறை பாதுகாப்பு வேண்டியிருக்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் நடிகை ஊர்மிளா.

மக்களவை தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் புதிதாக இணைந்த நடிகை ஊர்மிளா, வடக்கு மும்பை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிகப்பட்டார். பிரச்சார வேலைகளில் பிஸியாக இருக்கும் ஊர்மிளா, பாஜக ஆதரவாளர்களால் அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்.

urmila

சமூக வலைதளங்களில் இயங்கும் ஊர்மிளா, பாஜகவினர் சமூக வலைதளங்களில் என் மீது வன்மத்துடன் பதிவிட்டு வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தால் எனக்கும் என்னை சார்ந்த பெண்களுக்கும் ஆபத்து அதிகரிக்கலாம் என்ற காரணத்தால் அமைதியாக இருந்தேன் என்றார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி, பொரிவ்லி ரயில் நிலையம் அருகே ஊர்மிளா பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரது ஆதரவாளர்கள் மோடிக்கு எதிராக கோஷமிட்டுள்ளனர். இதனை அறிந்து அங்கு வந்த பாஜக ஆதரவாளர்கள் சிலர், ஊர்மிளாவையும் அவரது ஆதரவாளர்களையும்  அசிங்கமான வார்த்தைகளில் திட்டியிருக்கிறார்கள். இதனால் இரு கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

urmila

இதுகுறித்து பேட்டியளித்த ஊர்மிளா, எங்களை அச்சுறுத்ததான் பாஜகவினர் இவ்வாறு நடந்துகொள்கின்றனர். இது ஆரம்பம்தான், இன்னும் வன்முறையாக நடந்துகொள்ளவும் தயங்கமாட்டார்கள். நான் காவல்துறையிடம் புகார் அளித்து பாதுகாப்பு கேட்டிருக்கிறேன், என் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கே.எஸ்.ரவிக்குமாருக்கு ரஜினி கொடுத்த எதிர்பாராத ட்விஸ்ட்! ரஜினி ரசிகர்களுக்கும் தான்…