பாஜக மகளிரணி செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

 

பாஜக மகளிரணி செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பாஜக மகளிரணி செயலாளர் மகாலட்சுமியின் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மதுரை: பாஜக மகளிரணி செயலாளர் மகாலட்சுமியின் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக மகளிரணி செயலாளராக இருப்பவர் மகாலட்சுமி. இந்நிலையில், மதுரை தெப்பகுளம் பங்கஜம் காலனியில் உள்ள  இவரது வீட்டில் இன்று அதிகாலை 4 மணியளவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர். பெட்ரோல் குண்டு மகாலட்சுமியின் கார் மீது விழுந்ததில், அவரது கார் தீக்கிரையானது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள தெப்பக்குளம் போலீசார், மாகாலட்சுமியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.