பாஜக போலவே இந்துத்வாவிற்கு மாறி வரும் காங்கிரஸ் – கேரளா முதல்வர் குற்றச்சாட்டு

 

பாஜக போலவே இந்துத்வாவிற்கு மாறி வரும் காங்கிரஸ்  – கேரளா முதல்வர் குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சி மிதவாத இந்துத்துவா கொள்கையைக் கடைபிடித்து வருகிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

 

பாஜக-வைப் போலவே காங்கிரசும் மாறி வருகிறது என கேரள முதல்வர் பினராயி விஜயன் குடம் சாட்டியுள்ளார்.

மிதவாத இந்துத்வா 

பொதுவாகவே இந்தியாவைப் பொறுத்தவரை தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக இரண்டுமே வலதுசாரிக் கொள்கையுடையவை தான் என்பது அனைவரும் அறிந்த விஷயம். என்றாலும் காங்கிரஸ் சற்று மிதவாதக் கொள்கைகளையுடையது, அனால், பாஜக தீவிர வலதுசாரி அமைப்பு. பிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தில் இப்போது நாம் சந்தித்து வரும் பிரச்சனைகளுக்கு இந்தப் போக்கும் முக்கியக் காரணம் ஆகும்.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற முன்னாள் முதல்வர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு நினைவு தின நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சி மிதவாத இந்துத்துவா கொள்கையைக் கடைபிடித்து வருகிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

congress

மேலும் அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சிக்கு தொடக்கத்தில் மதச்சார்பற்ற கட்சி என்ற ஒரு பெயர் இருந்தது. ஆனால், தற்போது தனது மதச்சார்பற்ற தன்மையை காங்கிரஸ் கட்சி இழந்து கொண்டிருக்கிறது. இந்துக்களுக்கு மட்டுமே ஆதரவான போக்கை காங்கிரஸ் கடைப்பிடித்து வருவதை சமீபகாலமாக பார்க்க முடிகிறது.

கட்சி தாவும் காங்கிரஸ் பிரமுகர்கள் 

குஜராத் சட்டப்பேரவையைச் சேர்ந்த 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு தாவிவிட்டனர். அடுத்த சில மாதங்களில் மேலும் சிலர் பாஜகவுக்கு தாவலாம். சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் டாம் வடக்கன், பாஜகவில் இணைந்துவிட்டார்.

hindhuthva

பாஜகவைப் போலவே இந்துத்துவா கொள்கைக்கு மாறி வந்தாலும், மிதவாத இந்துத்துவா கொள்கையை காங்கிரஸ் கடைப்பிடிக்கிறது. மத்தியபிரதேசத்தில் பசுவை வெட்டிக் கொன்றதாக பலர் மீது காங்கிரஸ் அரசு வழக்கு தொடுத்துள்ளதே இதற்கு சான்று என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

மொத்த இந்தியாவிலும் காங்கிரஸ் ஆளும் ஒரே மாநிலமாக இருப்பது கேரளா மட்டும் தான். அதையும் மாற்றுவோம் என பாஜக சூளுரைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.