பாஜக பின்னடைவு; அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே…. கெத்து காட்டும் தமிழிசை

 

பாஜக பின்னடைவு; அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே…. கெத்து காட்டும் தமிழிசை

5 மாநில தேர்தலில் பாஜக பின்னடைவு அடைந்திருக்கும் சூழலில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை: 5 மாநில தேர்தலில் பாஜக பின்னடைவு அடைந்திருக்கும் சூழலில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. குறிப்பாக பாஜக ஆட்சி செய்த ம.பி, ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அதிக இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. இதனால் பாஜக தொண்டர்கள் பலத்த சோகம் அடைந்துள்ளனர். மேலும் மூத்த தலைவர்கள் கூட்டத்திற்கும் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், வெற்றியால் துள்ளி குதிப்பதுமில்லை. தோல்வியால் துவண்டு போவதுமில்லை. அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லை என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. தோல்வியை தள்ளிவிட்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம். ராஜஸ்தானிலோ, மத்திய பிரதேசத்திலோ காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையாக வெல்லவில்லை. எனவே எங்களுக்கு இது பெருமையான தோல்விதான்.

சட்டீஸ்கரில் நாங்கள் அடைந்திருக்கும் தோல்வியை நான் ஒப்புக்கொள்கிறேன். அதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கூட்டணி வெல்லும் என காங்கிரஸ் கூறியதை தெலங்கானா மாற்றி காண்பித்திருக்கிறது. இவர்கள் வெற்றி பெற்றால் மக்களால் வெற்றி பெற்றோம்என்கிறார்கள். நாங்கள் வெற்றி பெற்றால் ஓட்டு இயந்திரத்தால் வெற்றி பெற்றோம் என்கிறார்கள். எனவே அனைத்து தேர்தலிலும் வருவது மக்கள் தீர்ப்புதான் இயந்திர தீர்ப்பு இல்லை என ஒப்புக்கொள்ள வேண்டும் என்றார்.