பாஜக பற்றி பேச திமுகவுக்கு தகுதி இல்லை; முதல்வர் விளாசல்.. வலுக்கும் பாஜக-அதிமுக உறவு?

 

பாஜக பற்றி பேச திமுகவுக்கு தகுதி இல்லை; முதல்வர் விளாசல்.. வலுக்கும் பாஜக-அதிமுக உறவு?

பாஜக பற்றி பேச திமுகவுக்கு தகுதியில்லை என முதலமைச்சர் பழனிசாமி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: பாஜக பற்றி பேச திமுகவுக்கு தகுதியில்லை என முதலமைச்சர் பழனிசாமி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் 47-ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் இணை-ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது, “நாங்கள் ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட ஒன்றறை வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரை நாங்கள் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. ஆனால், என் மீது ஊழல் குற்றம் சாட்டி அவப்பெயர் ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது, அந்த பகல்கனவு பலிக்காது.  

edappadi

எப்படியாவது அதிமுக ஆட்சியை கலைத்துவிடலாம் என மு.க.ஸ்டாலின் திட்டம் தீட்டுகிறார். அது எதுவும் நிறைவேறப் போவதில்லை” என தன் பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, அதிமுக பற்றியோ, பாஜக பற்றியோ பேச திமுகவுக்கு தகுதி இல்லை என்றும் முதலமைச்சர் பேசியுள்ளார்.

stalin mk

ஏற்கனவே தமிழக அரசையும், அதிமுகவையும் பாஜக ஆட்டுவிப்பதாக ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி வரும் இந்த நிலையில், முதலமைச்சரின் இந்தப் பேச்சு அதை உறுதிப்படுத்தும் விதமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.