பாஜக படுதோல்வி: ‘புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்’ – கமல் ட்வீட்

 

பாஜக படுதோல்வி: ‘புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்’ – கமல் ட்வீட்

5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்திருப்பதை ‘புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்’ என நடிகர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

சென்னை: 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்திருப்பதை ‘புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்’ என நடிகர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு நடத்தப்பட்ட தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ம.பி, ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜகவைவிட காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக, பாஜக ஆட்சி செய்து வரும் ம.பி, ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தனது ஆட்சியை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பாஜக தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம், மோடிக்கு எதிரான தலைவராக ராகுல் காந்தியை இந்த தேர்தல் முடிவுகள் அடையாளப்படுத்தியிருப்பதாக காங்கிரஸ் தொண்டர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், பாஜகவின் இந்த படுதோல்வியை ‘புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்’ என்றும், இதுவே மக்கள் தீர்ப்பு என்றும் நடிகர் கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.