பாஜக தலைவர்கள் மீது FIR பதிவு செய்ய டெல்லி போலீஸ் மறுப்பு 

பாஜக தலைவர்கள் மீது FIR பதிவு செய்ய டெல்லி போலீஸ் மறுப்பு 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த ஷாகீன் பாக் போராட்டத்தைத் தொடர்ந்து, ஜாஃபராபாத், மாஜ்பூர் ஆகிய இடங்களிலும் போராட்டம் நடைபெற்று வந்தது. இதில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் மத்தியில் மோதல் ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு டெல்லியில் ஒரு மாத காலத்துக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வடகிழக்கில் ஏற்பட்ட வன்முறையில் பலியானவர்கள் எண்ணிக்கை 35ஆக  உயர்ந்துள்ளது.

delhi violence

இந்நிலையில் டெல்லியில் பொது மேடையில் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை காவல்துறை நிராகரித்துள்ளது. பாஜக தலைவர்கலான அனுராக் தாகூர் (மத்திய நிதித்துறை இணை அமைச்சர்), பர்வேஷ் வர்மா (மேற்கு டெல்லி தொகுதி மக்களவை உறுப்பினர்) மற்றும் கபில் மிஸ்ரா (பாஜக முன்னாள் எம்.எல்.ஏ.) ஆகியோர் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதால் அவர்கள் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது எப்.ஐ.ஆர். (FIR) பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிடப்பட்டனர். ஆனால் இப்போதைக்கு இவர்கள் யார் மீதும் எப்.ஐ.ஆர். (FIR) பதிவு செய்யமுடியாது  டெல்லி காவல்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார். 

டெல்லி வன்முறை தொடர்பாக பொதுமக்கள் 48 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாஜக தலைவர்களை மட்டும் காவல்துறையினர் கைது செய்ய மறுப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.