பாஜக கூட்டணி அமைக்குமா? அமைக்காதா? பொன்.ராதா விளக்கம்

 

பாஜக கூட்டணி அமைக்குமா? அமைக்காதா? பொன்.ராதா விளக்கம்

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைக்குமா?அமைக்காதா? என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைக்குமா?அமைக்காதா? என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சூழலில் கட்சிகளின் கூட்டணி விவகாரங்கள் சூடு பிடித்துள்ளன. இந்திய அளவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த திட்டமிட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக – காங் – மதிமுக – விசிக – இடதுசாரிகள் என பிரம்மாண்ட கூட்டணி அமைய இருக்கும் சூழல் உருவாகி இருக்கிறது. ஆனால் அதிமுகவோ கூட்டணி குறித்து எந்த சமிக்ஞையையும் வெளிக்காட்டாமல் இருக்கிறது. மேலும், அதிமுக – பாஜக கூட்டணிதான் அமையும் என அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய இணையமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் பாஜக கடந்த 2014-ம் ஆண்டு இருந்த நிலையில் இப்போது இல்லை. தமிழகத்தில் பாஜகவின் நிலை எப்படி இருக்கிறதோ அதை சார்ந்துதான் தேர்தல் முடிவு இருக்கும்.

2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை கூட்டணியுடன்தான் சந்திக்க வேண்டும் என்ற நிலையில் எல்லா கட்சிகளும் உள்ளன. பாஜக-வும் அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறது. அதே நேரத்தில் எந்த கட்சியோடும் ஒட்டிபோக வேண்டும் என்ற ஏக்கத்தில் பாஜக இல்லை. சம உணர்வோடு யார் வருகிறார்களோ அவர்களோடு கூட்டணி என்றார்.