பாஜக கூட்டணிக்கு ஓட்டு போடுங்கோ; வாக்கு சேகரிக்கும் மதுரை ஆதீனம் 

 

பாஜக கூட்டணிக்கு ஓட்டு போடுங்கோ; வாக்கு சேகரிக்கும் மதுரை ஆதீனம் 

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளை வெற்றிபெறச் செய்யுமாறு மதுரை ஆதீனம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளை வெற்றிபெறச் செய்யுமாறு மதுரை ஆதீனம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக -அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய  கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றிபெற வேண்டும் என  மதுரை ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்றார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதீனம், பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளை வெற்றிபெறச் செய்யுங்கள். தமிழகத்துக்காக அன்றாடம் உழைக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செயல்கள் பாராட்டுக்குரியது. பாஜக மதச்சார்பற்ற கட்சியாக திகழ்கிறது. எனவே இந்தக் கூட்டணிதான் வெற்றிபெறும் என தெரிவித்தார்.

அபிநந்தன் புகைப்படத்தை வைத்து பிரச்சாரம் செய்த பாஜக தேர்தல் ஆணையத்தால் எச்சரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது ஓட்டு சேகரிக்க மதுரை ஆதீனத்தின் அருளை நாடியிருக்கிறது பாஜக, இந்தமுறை ஆதீனம் அருளால் பாஜக நோட்டாவை வெற்றிபெறுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.