பாஜக ஆளையே தூக்கியடித்த எடப்பாடி… பின்னணியில் திமுக..?

 

பாஜக ஆளையே தூக்கியடித்த எடப்பாடி… பின்னணியில் திமுக..?

அரசு விழாக்களில் தி.மு.க எம்.பி., பார்த்திபனுக்கு தந்த முக்கியத்துவத்தை, அ.தி.மு.க எம்.எல்.ஏ., க்களுக்கு தரவில்லை என முதல்வரிடம் புலம்பி இருக்கிறார்கள்.

சேலம்  மாவட்ட பெண் கலெக்டர் ரோஹிணி சமீபத்தில் அதிரடியாக பணியிட மாற்றம் செய்தார்கள்.  அவர் மாநில அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க ஆர்வம் காட்டவில்லை. அதே நேரத்தில் மத்திய அரசின் திட்டங்களை  கொண்டு போய் சேர்ப்பதில் முனைப்போடு இருந்தார் என்பதும் ஒரு காரணம். அது மட்டுமில்லாமல் பாஜக மீது, ரோஹினி சாப்ட் கார்னராக இருந்ததாக அதிமுகவினர் சொல்லி வருகிறார்கள்.eps

 இப்போது இதை உறுதி  செய்வது போல, சில சம்பவங்கள் சேலம் மாவட்டத்தில்  நடந்து வருகிறது.  கலெக்டரை மாற்றியவுடன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக நிர்வாகிகள் நடத்தும் ஒரு வாட்ஸ்அப் குழுவில் கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள். அடுத்து பாஜகவின் அங்கமான  மகாசபை சார்பில், மாநகரம் முழுவதும் பரபரப்பான கண்டன போஸ்டர்களையும் ஒட்டி வருகிறார்கள்.  இதை சாக்காக வைத்து  அதிமுகவினர் ‘நாங்க ஆதாரம் இல்லாம எந்த புகாரையும் சொல்ல மாட்டோம்’ என கூறி வருகிறார்கள். Rohini

ரோஹினி 2017ம் வருஷம், சேலம் கலெக்டராக நியமிக்கப்பட்டார்.  டெங்கு ஒழிப்பு, சுகாதாரம் என  சுறுசுறுப்பாக செயல்பட்டு  நல்ல பெயர் எடுத்து வந்தார். ஆனால், போகப் போக  அவரது நடவடிக்கை மாறி விட்டது. அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர். தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சியினருக்கு சாதகமாக நடந்து கொள்ளவில்லை. Rohini

அரசு விழாக்களில் தி.மு.க எம்.பி., பார்த்திபனுக்கு தந்த முக்கியத்துவத்தை, அ.தி.மு.க எம்.எல்.ஏ., க்களுக்கு தரவில்லை என  முதல்வரிடம் புலம்பி இருக்கிறார்கள்.  ரோகிணி சேலம் மாவட்ட ஆட்சியராகப் பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் மாவட்டத்தில் உள்ள 10 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளையும் தட்டிக் கழித்து வந்ததையும், தொடர்ந்து முதல்வர் கவனத்துக்கு தெரியப்படுத்தி வந்தார்கள் அம்மாவட்ட அ.தி.மு.க-வினர். அந்த கோபத்தில் தான் ரோஹினியை  இசை பல்கலை பதிவாளர் பதவிக்கு துாக்கி அடித்ததாக கூறுகிறார்கள். ஆக ரோஹினி விஷயத்தில் ஆளுக்கொரு காரணம் சொல்லி வருகிறார்கள்.