பாஜக ஆதரவு அரசு வெளியேற்றப்பட வேண்டுமா இல்லையா….எம்.பி ரவிக்குமார் ட்வீட்…

 

பாஜக ஆதரவு அரசு வெளியேற்றப்பட வேண்டுமா இல்லையா….எம்.பி ரவிக்குமார் ட்வீட்…

பாஜக அரசு தமிழகத்தில் இருக்க வேண்டுமா அல்லது வெளியேற்றப்பட வேண்டுமா என்பதை பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும் என்று எம்.பி.ரவிக்குமார் தெரிவித்தார்.

தற்போது செய்தியாளர்களை சந்தித்த இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நாங்குநேரி, விக்ரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகளை அறிவித்தார்.
அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெற உள்ள இத்தேர்தலுக்கு திமுகவும், அதிமுகவும் தங்களது வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.சுனில் அரோர

இந்நிலையில் தேர்தல் அறிவிப்புகள் குறித்து தனது வலைதள பக்கத்தில் ட்வீட் செய்த விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினரான எம்.பி ரவிக்குமார் ” விக்ரவாண்டியில் நடைபெறும் தேர்தலில் அளிக்கப்படும் வாக்குகள் திமுகவா அல்லது அதிமுகவா என்பதை முடிவு செய்ய இல்லை, பாஜக ஆதரவு அரசு வெளியேற்றப்பட வேண்டுமா இல்லையா என்பதை நிலைநாட்டப்படுவதற்கானது” என்று பதிவிட்டுள்ளார்.

பாஜக அரசை பகிரங்கமாக விமர்சித்து வரும் எம்.பி.ரவிக்குமார் அண்மையில் மத்திய அரசுக்கு உபரி நிதி வழங்கிய ஆர்.பி.ஐ-யை சாடி, ரிசர்வ் வங்கி ஆர்.எஸ்.எஸ் பிடியில் உள்ளது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.