பாஜகவை வீழ்த்த ஓரணியில் இணைய வேண்டும்: மல்லிகார்ஜூனே கார்கே அதிரடி

 

பாஜகவை வீழ்த்த ஓரணியில் இணைய வேண்டும்:  மல்லிகார்ஜூனே கார்கே அதிரடி

பாஜகவை வீழ்த்த ஒரே கருத்துடைய கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

பெங்களூரு: பாஜகவை வீழ்த்த ஒரே கருத்துடைய கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 மாநிலங்களில் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே தான் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை தக்க வைக்கவும், ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆட்சி அமைக்கவும் பாஜக தீவிர வியூகங்களை வகுத்து வருகிறது. அதேபோல் பாஜகவை இந்த தேர்தல்களில் தோல்வியடை செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி உட்பட எதிர்க்கட்சிகளும் வியூகங்களை வகுத்து வருகிறது.

மேலும் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அமைய இருக்கும் கட்சிகளின் கூட்டணியை இந்த தேர்தல்கள் நிர்ணயிக்கும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை 5 மாநில தேர்தல்கல் ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதற்கே உரிய அரசியல் வியூகங்கள் உள்ளன. ஆனால் ஒரே கருத்துடைய கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். இந்த கொள்கையில் காங்கிரஸ் நம்பிக்கை வைத்துள்ளது.மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்துவது எதிர்க்கட்சிகளின் குறிக்கோளாக உள்ளது. இந்த சூழலில் கட்சி தலைவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் என்றார்.