பாஜகவை விமர்சித்த பேராசிரியரை மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைத்த இந்துத்துவ அமைப்பு

 

பாஜகவை விமர்சித்த பேராசிரியரை மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைத்த இந்துத்துவ அமைப்பு

பாஜகவை விமர்சித்த கல்லூரி பேராசிரியரை மண்டியிட்டு மன்னிப்பு கேட்க செய்திருக்கிறது ஏபிவிபி இந்துத்துவ அமைப்பு.

விஜயபுரா: பாஜகவை விமர்சித்த கல்லூரி பேராசிரியரை மண்டியிட்டு மன்னிப்பு கேட்க செய்திருக்கிறது ஏபிவிபி இந்துத்துவ அமைப்பு.

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிபவர் சந்தீப் வாதர். இவர், இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவும் பதட்டமான சூழலுக்கு பாஜகதான் காரணம் என பேஸ்புக்கில் பதிவு செய்திருக்கிறார். இதனால் கடுப்பான ஏபிவிபி எனும் இந்து தேசியவாத அமைப்பு, அவரை மண்டியிட்டு மன்னிப்பு கேட்க செய்திருக்கின்றனர். அவரது பேஸ்புக் பதிவை நீக்க செய்தது மட்டுமல்லாமல், இனி இப்படி பதிவிடக்கூடாது எனவும் மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் நடைபெறும்போது அங்கு ஒரு காவலர் இருந்தது குறிப்பிடத்தக்கது. மன்னிப்பு கேட்ட பேராசிரியரின் மொபைல் ஸ்விட்ச் ஆப் செய்யப்படுள்ளது, அவரை தொடர்புகொள்ள இயலவில்லை என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏபிவிபி அமைப்பினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது முதல்முறை அல்ல, பீப் (மாட்டிறைச்சி) திருவிழா நடத்திய சென்னை ஐஐடி மாணவரை தாக்கியதும் இதே இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்கள்தான். பாஜக ஆட்சியில் ஜனநாயகம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என பொது வெளியில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.