பாஜகவை காலி செய்ய பிரசாந்த் கிஷோர் கூறும் அறிவுரை! முதலமைச்சர்களே தயாரா?

 

பாஜகவை காலி செய்ய பிரசாந்த் கிஷோர் கூறும் அறிவுரை! முதலமைச்சர்களே தயாரா?

பாஜக அல்லாத இந்தியாவை உருவாக்க 16 மாநில முதலமைச்சர்கள் ஒன்றிணைய வேண்டும் என தேர்தல் வியூகங்களை வகுத்துக்கொடுக்கும் லெஜெண்ட்டான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல், சட்டசபை தேர்தல் வெற்றிக்கு வியூகம் அமைத்து தருவதில் அகில இந்திய அளவில் பிரச்சார வியூகராகக் கருதப்படுபவர் பிரசாந்த் கிஷோர். இவர் நடத்தி வரும் நிறுவனம் பல கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து தந்துள்ளது.

பிரசாந்த் கிஷோர்

 

கடந்த, 2014 மக்களவை தேர்தலில் மத்தியில், பிரதமர் மோடி ஆட்சி அமைக்கவும், பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் ஆட்சி அமைவதற்கும் அவர் காரணமாக இருந்தார். மேலும் தமிழகத்தில் பல அரசியல் கட்சி தலைவர்களுக்கு தேர்தலில் ஜெயிக்க வியூகங்களை வகுத்துக்கொடுப்பதே இவரின் வேலை. மோடியுடன் சேர்ந்து பாஜகவை வெற்றிப்பெறவைக்க பல தேர்தல் வியூகங்களை வகுத்துக்கொடுத்த பிரசாந்த், அண்மைகாலமாக பாஜகவிலிருந்து விலகி,ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்துள்ளார். இதனால் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை கையிலெடுத்துள்ளார். 

 

 

இந்நிலையில் தற்போது பிரசாந்த் கிஷோர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்ற பாஜக அல்லாத 16 முதலமைச்சர்களும் ஒரு அணியில் சேர வேண்டும். கேரளா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் குடியுரிமை சட்ட மசோதாவை புறக்கணித்துள்ளனர். தேசிய குடியுரிமை பதிவேடு சட்டமானது பணமதிப்பிழப்பு போல் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.” என பதிவிட்டுள்ளார்.