பாஜகவையே விமர்சனம் பன்றீங்களா?…. மன்சூர் அலிகான் மீது பாய்ந்தது வழக்கு!!

பாஜகவையே விமர்சனம் பன்றீங்களா?…. மன்சூர் அலிகான் மீது பாய்ந்தது வழக்கு!!

பிரதமர் மற்றும் குடியரசு தலைவரை அவதூறாக பேசியதாக நடிகரும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவருமான மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பிரதமர் மற்றும் குடியரசு தலைவரை அவதூறாக பேசியதாக நடிகரும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவருமான மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக  திண்டுக்கல் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிட்டார்.  முகிலன் மீது சாட்டப்பற்ற  பாலியல் குற்றம் குறித்து அவருக்கு ஆதரவாக பேசிய மன்சூர் அலிகான், பா.ஜ.க அரசை பற்றியும், குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் குறித்து அவதூறாக பேசினார். 

இதுகுறித்து இந்து மக்கள் முன்னணி கட்சி சார்பில் சென்னை மத்திய குற்றப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகார் மனுவில், மன்சூர் அலிகானின் சர்ச்சைக்குரிய பேட்டி யுடியூப்பில் வேகமாக டிரெண்டாகி வருவதாகக் கூறப்பட்டிருந்தது. புகாரின் அடிப்படையில் மன்சூர் அலிகா மீது பிரிவினையை தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் எட்டாம் (ஆகஸ்ட் 8) தேதிவரை கைது செய்ய முடியாதபடி  வழக்குக்கு மன்சூர் அலிகான் தடை வாங்கியுள்ளார். ஏற்கனவே 8 வழிச்சாலை குறித்து அவதூறு பரப்பிய மன்சூர், தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

இதுகுறித்து பேசிய மன்சூர் அலிகான், “இது ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் செயல். நான் நீதிமன்றத்தை நம்புகிறவன். எதையும் சட்டப்படி சந்திப்பேன்” என்றார்