பாஜகவுடன் கூட்டணியா? அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம்!

 

பாஜகவுடன் கூட்டணியா? அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம்!

பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்காக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் டெல்லி சென்றதாக கூறப்படும் நிலையில், அதனை அமைச்சர் செல்லூர் ராஜூ மறுத்துள்ளார்.

மதுரை: பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்காக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் டெல்லி சென்றதாக கூறப்படும் நிலையில், அதனை அமைச்சர் செல்லூர் ராஜூ மறுத்துள்ளார்.

வருகின்ற 2019 ஆம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-வை வீழ்த்துவதற்காக, தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை தோழமை பாராட்டி வரும் கட்சிகளுடன் திமுக கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருகிறது. அதாவது திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் ஆகியவை கூட்டணி சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவை பொறுத்தவரைக் கூட்டணி நிலவரம் என்னவென தற்போது வரை தெரியவில்லை. இருப்பினும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன. அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோரின் டெல்லி பயணம், கூட்டணிக்காகவே என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்காக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் டெல்லி செல்லவில்லை. அவர்கள் துறை ரீதியான பணிகளுக்காகவே டெல்லி சென்றனர். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்திலேயே அறிவிக்கப்படும்’ என்றார்.