பாஜகவுக்கு வந்த விபரீத ஆசை… அதிமுகவை கழற்றி விட்டு நாங்குநேரியில் தனித்துப்போட்டி..!

 

பாஜகவுக்கு வந்த விபரீத ஆசை… அதிமுகவை கழற்றி விட்டு நாங்குநேரியில் தனித்துப்போட்டி..!

டெபாசிட் போய் தேசிய தலைமைக்கு அசிங்கத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

தமிழகத்தில் பாஜகவுக்கு தலைவரே இல்லாத நிலையில் தனித்து போட்டியிடுவது குறித்து மாநில அளவில் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 

ops

ஒரு சிலர் தனித்து நின்று நமது பலத்தை நிரூபிக்கலாம். அதற்கு சரியான வாய்ப்பு  கிடைத்து இருக்கிறது. நாங்குநேரியில் கணிசமாக வாக்குகளை வாங்கலாம் என்று சொல்கிறார்கள். நிரந்தர தலைவரை நியமிக்கும் வரை இடைத்தேர்தலில் கவனம் செலுத்துவதைவிட உறுப்பினர் சேர்க்கையில் கவனம் செலுத்தலாம்.  இடைத்தேர்தலில் நம்மால் பணத்தை செலவிட முடியாது. 

இதனால் டெபாசிட் போய் தேசிய தலைமைக்கு அசிங்கத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இரண்டு தரப்பும் பாஜக செயல் தலைவர் மூலமாக  காய்களை நகர்த்தி வருகின்றனர். அவரே நமக்கு வட இந்தியாவில் இரண்டு மாநில பொதுத் தேர்தல்கள்தான் முக்கியம். உங்கள் பிரச்னையை தமிழக பொறுப்பாளரிடம் சொல்லி தீர்த்துக் கொள்ளுங்கள் என்று பதில் சொல்லி இருக்கிறார்.

அதனால்  இடைத்தேர்தல் போட்டியில் அநேகமாக பாஜக இருக்காது என்று அக்கட்சியின் தொண்டர்கள் பேசிக் கொள்கின்றனர். மக்களவை தேர்தலில் பலமான கூட்டணி அமைத்தும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத பாஜக, இடைத்தேர்தலில் தனித்து நின்றால் மண்ணைக் கவ்வும் என்பது சிறுபிள்ளைக்கூட தெரியும். அதை உணர்ந்தும் இப்படி ஒரு எண்ணம் அவர்களுக்கு வந்தது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.