பாஜகவுக்கு டாட்டா… காங்கிரஸுக்கு கை கொடுக்கும் அதிமுக… அமைச்சர்கள் மூலம் அடிப்போடும் எடப்பாடி..?

 

பாஜகவுக்கு டாட்டா… காங்கிரஸுக்கு கை கொடுக்கும் அதிமுக… அமைச்சர்கள் மூலம் அடிப்போடும் எடப்பாடி..?

சட்டமன்றத்தேர்தலில் எங்கே பாஜக கைவிட்டு விடுமோ என்கிற பதற்றத்திலும், பாஜகவுடன் திமுக கைகோர்த்து விடுமோ என்கிற அச்சத்திலும் அதிமுக இருந்து வருவதாகவும் அமைச்சர்களின் பேச்சை உற்று நோக்கும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுவரை பி.ஜே.பிக்கு பல்லக்கு தூக்கி வந்த அ.தி.மு.க சட்டமன்றத்தேர்தல் நெருங்கும்போது கூட்டணியை உடைத்துக் கொண்டு வெளியில் வரும் எனக் கணிக்கப்பட்டது. அதற்கேற்றார்போல் வேலூர் தொகுதி மக்களவை தேர்தலின் போது முத்தலாக் மசோதாவை கொண்டு வந்து அதிமுகவை அடிவாங்கச் செய்தது பாஜக. 
 
அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலின் போது குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை அமல்படுத்தி உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை துவைத்தெடுத்தது பாஜக. இதையெல்லாம் பாஜக அறிந்து செய்ததா..? இல்லை தமிழகத்தில் வலுவாக நாம் இல்லை என தெரிந்து செய்ததா? என்பது காவியடிக்கும் கேள்விகள். ஆனால் எப்போதுமே உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்றதே சரித்திரம்.  ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் பலத்த அடி வாங்கியது அதிமுக. 

ADMK

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் கொடுத்த அடியினால் எங்கே மாநகராட்சி, நகராட்சி தேர்தலில் பெரும் சரிவை அ.தி.மு.க சந்தித்துவிடுமோ என்கிற பயத்தில் அக்கட்சியினர் இருக்கிறார்கள். அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு நகராட்சி தேர்தல் ரிசல்ட் அவசியம்.  இதையெல்லாம் மனதில் கொண்டு கதர்துறை அமைச்சர் பாஸ்கரன் ‘எங்கள் அமைச்சர்கள் யாருக்குமே குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்படுவதில் விரும்பம் இல்லை. 

நாங்களே பி.ஜே.பி.,யில் இருந்து வெளியே வருவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்’’ என்று அந்தக் கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.  அதற்கு முன்பாக திமுகவுக்கும், காங்கிரஸ்  கட்சிக்கும் இடையிலான கூட்டணியில் உரசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு தூண்டில் வீசும் விதமாக  அடுத்த குண்டை வீசியிருக்கிறார்  அமைச்சர் செல்லூர் ராஜூ.

ஊரக வளர்ச்சி துறை சார்பில் ஊராட்சி மன்றத்தலைவர் துணைத்தலைவருக்கான பயிற்சி முகாம் மதுரையில் நடைபெற்றது. அப்போது பேசிய  செல்லூர் ராஜூ, “ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவத்தை நடிகர் ரஜினி பேச வேண்டிய அவசியம் என்ன?  ரஜினி மீது எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை.

modi

95வயதிலும் சாதி மற்றும் தீண்டாமை ஒழிப்பிற்காக பாடுபட்டவர் தந்தை பெரியார். மாபெரும் தலைவரின் போராட்டத்தை , பெருமையை சீர்குலைத்து பேசுவது தவறு. இன்று பெண்கள் ஊராட்சி மன்றத்தலைவர்களாக, மாவட்டத்தலைவர்களாக இருப்பதற்கு காரணம் பெரியார். அப்படிப்பட்டவரை பெண் உள்ளாட்சி
பிரதிநிதிகள் மறக்ககூடாது. ராஜீவ்காந்தியை கிராமத்தில் மறக்ககூடாது. கிராம ராஜ்யம் கொண்டு வந்தவர். காங்கிரஸ் கட்சியின் தலைவராக இந்த ராஜீவ்காந்தி தான். இந்த நாட்டுக்காக சேவையாற்றியவர்களில்
கருணாநிதிக்கும் பங்கு உண்டு. அதை என்னால் மறுக்க முடியாது’’ என்று பேசியது அதிமுகவின் கூட்டணி நிலைப்பாடு மீது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ops

 அ.தி.மு.கவினர் எப்போதும் தங்களது ஆட்சியின் சாதனைகளையும், மோடி ஆட்சியை பற்றியும் புகழ்ந்து பேசுவதை வேடிக்கையாகப்பேசுவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பவர்கள்.  அதனை விட்டுவிட்டு  திமுக அமைச்சர் போல் காங்கிரஸ், தி.மு.க  கட்சிகளை புகழ்ந்து பேசுகிறாரே. முதல் நாள் பாஜக கூட்டணியை விட்டு விலக ஒரு அமைச்சர் நேரம் பார்த்துக் கொண்டிருப்பதாக கூறுகிறார். அடுத்த நாள் மற்றொரு அமைச்சர் காங்கிரஸை புகழ்ந்து பேசுகிறார். இது கூட்டணி மாறுவதற்கான அச்சாரமா?’’ என முணுமுணுக்கிறார்கள்.

பரபரப்புக்கு பஞ்சமில்லாத அமைச்சர் செல்லூர் ராஜூ அடுத்த குண்டை வீசியிருப்பது அதிமுகவில் மட்டுமல்ல, திமுகவிலும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வரும் சட்டமன்றத்தேர்தலில் எங்கே பாஜக கைவிட்டு விடுமோ என்கிற பதற்றத்திலும், பாஜகவுடன் திமுக கைகோர்த்து விடுமோ என்கிற அச்சத்திலும் அதிமுக இருந்து வருவதாகவும் அமைச்சர்களின் பேச்சை உற்று நோக்கும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.