பாஜகவில் சேர்ந்து விடுகிறேன்: உதயநிதி ஸ்டாலின் அதிரடி

 

பாஜகவில் சேர்ந்து விடுகிறேன்: உதயநிதி ஸ்டாலின் அதிரடி

முரசொலி அறக்கட்டளை பதவியில் இருப்பதை நிரூபித்துவிட்டால் நான் பாஜகவில் சேர்வதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை: முரசொலி அறக்கட்டளை பதவியில் இருப்பதை நிரூபித்துவிட்டால் நான் பாஜகவில் சேர்வதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் சமீபகாலமாக அக்கட்சியின் மேடைகளில் தோன்றி வருகிறார். இதனையடுத்து கட்சியில் உதயநிதி முக்கிய பொறுப்புக்கு வர துடிக்கிறார் எனவும், திமுக வாரிசு அரசியல் செய்து வருகிறது எனவும் அதிமுகவினர் உள்ளிட்ட பலர் கூறி வருகின்றனர். ஆனால், கட்சியில் நான் தொண்டன் மட்டுமே என உதயநிதி அந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறார்.

இதற்கிடையே, பிரியங்கா காந்திக்கு காங்கிரஸில் பதவி கொடுக்கப்பட்டது குறித்து,  பாஜக இளைஞரணி தமிழக துணைத்தலைவர் எஸ்.ஜி. சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், குடும்ப அரசியல் குறித்து திமுகவினர் பேசுவதே கிடையாது. ஆனால் அவர்களை தமிழிசையுடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள். தமிழிசை குடும்ப அரசியல் மூலமாக வந்ததாக கூறுகின்றனர். அவர் குடும்பம் மூலமாக இந்த நிலைக்கு வரவில்லை. அவர் களத்தில் 15 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார். குடும்ப அரசியலால் முன்னேறவில்லை.” என கூறியிருந்தார்.

மேலும், உதயநிதிக்கு திமுக -வின் முரசொலி அறக்கட்டளையில் முக்கிய பதவி கொடுக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான பணங்களை கட்டுப்படுத்தக்கூடிய பதவி அது. இதையும் திமுகவினர் ஏற்றுக் கொள்வர். ஆனால் தமிழிசை, நிர்மலா சீதாராமனை ஒப்பிட்டு பேசுவர் என பதிவிட்டிருந்தார். 

இதற்கு பதிலளித்த உதயநிதி, நான் முரசொலி அறக்கட்டளை பதவியில் இருப்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா..? உங்களால் நிரூபிக்க முடிந்தால் நான் பாஜகவில் சேர தயார். அதுதான் எனக்கு அளிக்கப்பட கூடிய மோசமான தண்டனையாக இருக்கும் என பதிலளித்தார்.