பாஜகவில் இணையும் பிரபல நடிகை… அதிர்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள்

பாஜகவில் இணையும் பிரபல நடிகை… அதிர்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள்

‘குத்து’ படம் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை திவ்யா ஸ்பந்தனா. பொல்லாதவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர் நடிப்பதற்காக தனது பெயரை ரம்யா என்று மாற்றிக் கொண்டார். ரசிகர்கள் செல்லமாக ‘குத்து’ ரம்யா என்று அழைத்து வந்தனர்.  இந்நிலையில் நடிகை திவ்யா ஸ்பந்தனா பாஜகவில் சேரப் போகிறாரா என்று மொத்த கர்நாடகாவும் பரபரத்துப் போயிருக்கிறது.

ramya spandana

காங்கிரஸ் சார்பில் மாண்டியா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகை ‘குத்து’ ரம்யா, அடுத்து நடைபெற்ற தேர்தலில் தோல்வியுற்றாலும், காங்கிரஸ் கட்சியின் சமூகவலைதள பிரிவின் பொறுப்பாளராக தீவிரமாக செயல்பட்டு வந்தார். 36 வயதாகும் ரம்யா, இந்த சின்ன வயசிலேயே இவ்வளவு பெரிய பொறுப்பை வகித்து திறம்பட செயலாற்றுவதை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் அடிக்கடி பாராட்டி வந்தார்.

ramya spandana

இந்நிலையில் தேர்தலில் காங்கிரஸ்  வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே ஜெயித்தது. இதனால் அப்செட் ஆன ராகுல் காந்தி பதவி விலக போவதாக சொல்லவும், அவரை மற்ற தலைவர்கள் சமாதானப்படுத்தி வருகிறார்கள். அந்த சமயத்தில்தான், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, ‘ஒரு மாசத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் யாரும் டிவி விவாதங்களில் பங்கேற்க மாட்டார்கள் என்று சொன்னார். ஆனால் நிதியமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமனுக்கு பகிரங்கமாக ட்விட்டரில் வாழ்த்து சொல்லி இருந்தார் நடிகை ரம்யா . இது கட்சி வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

ramya spandana

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தில் இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல், ட்விட்டரில் இருந்து அதிரடியாக வெளியேறியுள்ளார் ‘குத்து’ ரம்யா. இதற்கு முன்பு, அவர் பதிவிட்டிருந்த தகவல்கள் எல்லாம் நீக்கப்பட்டு இருக்கின்றன.

காங்கிரஸ் கட்சி கொடுக்கிற அழுத்தத்தை ‘குத்து’ ரம்யா ரசிக்கவில்லை என்றும், தான் சுதந்திரமாக செயல்பட விரும்புவதாகவும், அதனால் அவர் வெகு விரைவில் பாஜகவில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பாஜக வை கிழித்து தோரணமாக தொங்கவிட்ட எஸ்.எம்.கிருஷ்ணாவையே ஏற்றுக் கொண்ட பாஜக, ‘குத்து’ ரம்யாவையும் ஏற்கத் தயங்காது என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.