பாஜகவில் இணையும் பிரபல சீரியல் நடிகை!?

 

பாஜகவில் இணையும் பிரபல சீரியல் நடிகை!?

சமீபத்தில் இவர் வாட்ஸ் ஆப் மூலம் சிலர் தன்னை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக குற்றச்சாட்டை  முன்வைத்துப் பரபரப்பைக் கிளப்பினார்.

சின்னதிரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து வரும் நடிகை ஜெயலட்சுமி  பாஜகவில் இணைய போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

jaya

சென்னை அண்ணா நகரில் வசித்து வருபவர் நடிகை ஜெயலட்சுமி. இவர் பல திரைப்படங்களிலும் தற்போது  ரியாலிட்டி ஷோக்கள்,சின்னத்திரை சீரியல்கள்  போன்றவற்றில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் வாட்ஸ் ஆப் மூலம் சிலர் தன்னை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக குற்றச்சாட்டை  முன்வைத்துப் பரபரப்பைக் கிளப்பினார்.

jaya

இந்நிலையில் நடிகை ஜெயலட்சுமி பாஜகவில் இணைய போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து அவர் இன்று பாஜகவில் தன்னை இணைத்து கொள்வார் என்று சினிமா வட்டாரத்தில் செய்தி பரவியுள்ளது.

jaya

சமீபகாலமாக சினிமா பிரபலங்கள் பாஜகவில் இணைவதை வழக்கமாக்கிக்  கொண்டுள்ளனர். பாலிவுட் முதல் கோலிவுட் வரை இந்த நிலை தொடர்கிறது.  அந்த வகையில் தற்போது சின்னதிரை நடிகர் நடிகைகளும் சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.