பாஜகவில் இணைகிறார் ஜி.கே. வாசன்… மாநில தலைவராக நியமிக்க வாய்ப்பு -திமுக எம்.பி செந்தில்குமார் 

 

பாஜகவில் இணைகிறார் ஜி.கே. வாசன்… மாநில தலைவராக நியமிக்க வாய்ப்பு -திமுக எம்.பி செந்தில்குமார் 

காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் இந்த மாதம் நடைபெற உள்ளது

காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் இந்த மாதம் நடைபெற உள்ளது .இதில் தற்போதுள்ள எம்.எல்.ஏ-க்கள் பலம் அடிப்படையில் தி.மு.க, அ.தி.மு.க தலா மூன்று இடங்களில் வெற்றி பெற முடியும். தி.மு.க தன்னுடைய வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்நிலையில் அதிமுக இன்று தனது வேட்பாளர்களை அறிவித்தது. அதில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுக்கு எம்.பி சீட் வழங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இதுகுறித்து ட்விட்டரில்  பதிவிட்டுள்ள திமுக எம்.பி. செந்தில்குமார் , “ GKவாசன்க்கு பிஜேபி பரிந்துரையில் ராஜ்ய சபா சீட். விரைவில் பிஜேபியில் இணைய இருக்கிறார். எனது புரிதலில் தமிழக தலைவராக வாசன் நியமிக்கப்படவுள்ளார். அப்போ இவ்வளவு நாட்கள் தொண்டை கிழிய கத்துன ஓயாமல் பலன் எதிர்பார்த்து ஆதரவு குடுத்த  எங்க தமிழக பாஜக தலைவர்கள் கதி…. என்ன கொடுமை Sir இது” என குறிப்பிட்டுள்ளார்.